பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் நாங்கள் பெரிய காட்டுக்கு நடுவில் போய்க் கொண்டிருந் தோம். இலங்கையில் உள்ள காடுகள் மைல் கணக்கில் நீண்டு இருக்கும். இரண்டு பக்கமும் மரங்கள் ஓங்கி உயர்ந்து சுவர் எடுத்தது போல வளர்ந்திருக்கும். அவற்றிற்கிடையில் சாலை செல்லும். வளைவே இல்லாமல் ஒரே நேர்கோட்டைப் போல அந்தச் சாலை இருக்கும். காடுகளில் யானைகள் சஞ்சாரம் செய் வது உண்டு. அமாவாசை இருளில் அத்தகைய சாலை வழியே நாங்கள் போய்க் கொண்டிருந்தோம். கார் போய்க்கொண்டிருந்தது. வரவர அதன் வேகம் மிகுதி யாயிற்று. கார் ஒட்டி ஏதோ முணுமுணுத்துப் பேசினார். நான் அதைக் கவனிக்கவில்லை. நான் அலங்காரப் பாட்டில் கருத்தாக இருந்தேன். அருணகிரிநாத சுவாமிகளுடைய திருவடியில் நின்று கந்தர் அலங்காரத்தில் உள்ளத்தைப் பறிகொடுத்துப் பாடிக் கொண்டிருந்தேன். கார் தலை தெறிக்கும் வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. என்னுடைய நண்பர்கள் ஏதோ பேசிக் கொண்ட தாக நினைப்பு இருக்கிறது. ஆனால் இன்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. நான் பாடப் பாட அவர்கள் கேட்டுக் கொண் டிருந்தார்கள். நெடுந்துரம் போன பிறகு ஓர் ஊர் வந்தது. எதிரே வேறு ஒருவர் கார் ஒட்டிக்கொண்டு வந்தார். அவரிடத்தில் எங்களுடைய கார் ஒட்டி ஏதோ சொன்னார். வந்தவர் காரை மேலே ஒட்டாமல் நிறுத்திவிட்டார். கடைசியில் கார் மட்டக்களப்பை அடைந்தது. அங்கே உள்ள நண்பர்கள் நாங்கள் தங்குவதற்கு ஓர் அழகான இடத்தை ஒழுங்கு பண்ணியிருந்தார்கள். அங்கே சென்று கை காலைச் சுத்தி செய்து கொண்டு திருநீற்றை எடுத்து இட்டுக்கொண்டேன். கந்தர் அலங் காரம் சொல்லி வந்தமையினால் எனக்கு ஒருவகையான கிளர்ச்சி உண்டாகி இருந்தது. முருகா என்று சொல்லி நெற்றி நிறைய நீற்றை இட்டுக் கொண்டேன். அப்போது கார் ஒட்டி பணிவுடன் வந்து என் காலில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கி னார்; எழுந்து, 'திருநீறு கொடுங்கள் என்று கையை நீட்டினார். நான் துறவி அல்லவே! மடாதிபதியும் அல்லவே! ஆதி சைவராக இருந்தாலும் திருநீறு கொடுக்கலாம். நான் உங்களைப் 459