பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பலவீனர்களாகிய நமக்கே அத்தகைய உறுதிப்பாடு இருக்குமானால் அகடிதகடனா சாமர்த்தியம் உடைய ஆண்டவனுக்கு வெற்றி நிச்சயம் என்பது தெரியாதா? முருகப் பெருமான் சூரபன்மனோடு போர் செய்ய வேண்டு மென்ற விருப்பத்தைக் கொண்டான். தேவர்களுக்குச் சேனாபதி என்ற பட்டத்தையும் சூட்டிக் கொண்டான். கவசத்தையும், வாளையும், வேலையும் எடுத்துப போர் செய்வதற்கு முன்னாலே எல்லாவற்றுக்கும் பின்னாலே கட்டிக் கொள்வதற்குரிய கழலை இப்போதே கட்டிக் கொள்கிறான். கவசம் கட்டி, தலைப்பாகை கட்டி, கச்சை கட்டி, போர் செய்து வெற்றிபெற்ற பின்பு கழல் கட்டவேண்டும். அதுதான் உலக முறை. ஆனால் தீராதி தீரப் பெருமாளாகிய ஆண்டவன் வீரத் திருக்கழலை முதலில் கட்டிக் கொள்கிறான். அது அவனுடைய வீரச் சிறப்பைக் காட்டுகின்றது. அருணகிரியாருடைய அகக்கண்ணில் முருகப்பெருமான் பூங்கழல் கட்டும் பெருமாளாகக் காட்சி அளிக்கிறான். அவன் சிறிய அடியை உடைய குழந்தை; தன்னுடைய சிற்றடிக்குப் பூங்கழல் கட்டுகிறான். இப்படித் தன் காலில் கழலை அணிவது எதற்காக? சூரனை வெல்வதற்காக. சூரனுக்கும், முருகனுக்கும் நேர்முகத்தில் பகை ஒன்றும் இல்லை. சூரன் முருகனுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை; துன்பமும் உண்டாக்கவில்லை. தேவ லோகத்தில் பலவகை இன்பங்களுடனும் வாழ்ந்த இந்திரனைத் துன்புறுத்தினான். இந்திரனுடைய மகனாகிய சயந்தனைச் சிறை யில் அடைத்தான். பல தேவர்களைத் தனக்குரிய ஏவலாளர்களாக வைத்தான். வேறு பலரைச் சிறையில் வைத்தான். இந்திரனும், இந்திராணியும் யாரும் அறியாதபடி ஓடி ஒளிந்து கொண்டிருந்தார்கள். தேவர்களுக்குத் தலைவனாகிய முருகப்பெருமான் தன் படைகளைக் காக்கும் கடப்பாடு உடையவன். அவர்களும் முருக னிடத்தில் வந்து இறைஞ்சித் தங்களுடைய பழைய நிலையை மீட்டுத் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். தங்க ளுடைய ஆற்றலை நினைந்து தங்கள் வாழ்வு என்றும் சத்திய மானது என்று நம்பிச் செருக்கோடு வாழ்ந்த அவர்களுக்கு வீழ்ச்சி உண்டாகியது. உண்மையைத் தெரிந்து கொண்டார்கள். தங்க ளுடைய பதவி நிலையாதது என்பதையும், இறைவன் திருவருள் 34