பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் வில்லை. நாம் வந்த இடம் அடர்ந்த காடு. யானைகள் உள்ள இடம். அநேகமாக இரவில் யாரும் அங்கே காரை ஒட்டிக் கொண்டு போகமாட்டார்கள். யானைகள் கூட்டம் கூட்டமாகச் செல்வதும் உண்டு; தனியாகச் செல்வதும் உண்டு. அவசியம் நேர்ந்து காரை ஒட்டிக்கொண்டு செல்லும்போது, யானைகள் வருவது தெரிந்தால் காரின் விளக்கை அணைத்துவிட்டுக் காரை அங்கேயே நிறுத்திவிடுவார்கள். யானைக்கூட்டம் போன பிறகு தான் காரை ஒட்டிச் செல்வது வழக்கம். இவற்றை எல்லாம் அறிந்தே இப்போது போகவேண்டாம் என்று சொன்னேன்." 'நடந்ததைச் சொல்லுங்கள்' என்று நான் தூண்டினேன். 'அதைத்தான் கொல்ல வருகிறேன். கார் வந்து கொண் டிருந்தபோது பக்கத்தில் மருக் என்று ஒரு யானை ஒரு மரத்தின் கிளையை ஒடித்தது எனக்குக் கேட்டது. யானைதான் கிளையை ஒடிக்கிறது என்பதை நான் அதுபவத்தால் உணர்ந்தேன். என்ன செய்வது என்று சற்றே தடுமாறினேன், வண்டியை நிறுத்திவிட்டு யானை போன பிறகு ஒட்டலாமா என்ற எண்ணம் வந்தது. நீங்கள் அப்போது முருகனைத் துதித்துப் பாடிக் கொண்டிருந் தீர்கள். அந்தப் பாட்டு என் காதில் விழுந்து கொண்டிருந்தது. எல்லாவற்றையும் மறந்து நீங்கள் பாடும்போது எனக்கும் கொஞ்சம் உணர்ச்சி உண்டாயிற்று. முருகன் காப்பாற்றுவான், காரைச் செலுத்தலாம் என்று எண்ணி வேகமாக விட்டேன். ஒருவாறு அந்த இடத்தைக் கடந்து அப்பால் வந்துவிட்டேன். ஆனால் பின்னால் வருகிற ஆபத்து அப்போது தெரியவில்லை." “என்ன, மறுபடியும் ஆபத்தா?' என்று நான் கேட்டேன். "ஆம். இது முன்னதைவிட மிகவும் கடுமையான ஆபத்து. ஆணும் பெண்ணுமாகிய இரண்டு யானைகள் சேர்ந்திருந்தால் அதைக் கலைக்கிறவனுக்கு உண்டாகும் ஆபத்தைச் சொல்ல முடியாது. அப்படி இரண்டு யானைகள் சாலைக்கு அருகில் மரத்துக்குப் பின்னாலே நின்று கொண்டிருந்ததை நான் வாசனை யால் உணர்ந்தேன். இதுவும் எங்களுக்கு அநுபவம். இந்த முறை நிச்சயம் நம்முடைய காருக்கு ஆபத்து என்று எண்ணினேன். யானை தன்னுடைய காலால் பந்தைத் தள்ளுவதுபோலக் காரை உருட்டிவிடும். கார் வேகத்தைவிட உங்கள் பாட்டு வேகம் 461