பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மிகுதியாக இருந்தது. ஆண்டவன் உங்கள் வாயிலாக அப்போதும் எனக்குத் தைரியத்தைக் கொடுத்தான். என் உள்ளம் நடுங்கி னாலும் கை நடுங்கவில்லை. இறுகச் சக்கரத்தைப் பிடித்தேன். உங்கள் பாட்டுக் காது வழியாகப் புகுந்து தைரியத்தை ஊட்டியது. எப்படியாவது இதைத் தாண்டிவிட வேண்டுமென்ற எண்ணத்தில், ஒட்ட முடியாத வேகத்தில் காரை ஒட்டினேன். நல்ல வேளை யாக அக்கண்டத்தையும் தாண்டிவிட்டோம்." 'ஏதோ ஓரிடத்தில் வேறு யாரிடமோ பேசினீர்களே!” என்று கேட்டேன். “எதிரே ஒருவர் காரில் வந்தார். போகிற வழியில் யானை இருக்கிறது என்று எச்சரிக்கை செய்தேன்." 'நீங்கள் ஏதோ அலியா என்றல்லவா சொன்னீர்கள்?' என்று கேட்டேன். 'சிங்களத்தில் அலியா என்றால் யானை என்று பொருள். இப்படி நம்முடைய பயணத்தில் உங்களால், உங்களுடைய பக்திச் சிறப்பினால், எனக்குத் தைரியம் உண்டாயிற்று. நாம் பிழைத்தோம்' என்று சொல்லி முடித்தார் கார் ஒட்டி. அவர் சொன்னதைக் கேட்டவுடன் என்னால் பேச முடிய வில்லை. என் கண்களில் நீர் முட்டியது. தொண்டை அடைத்துக் கொண்டது. என்னுடைய உள்ளம் அருணகிரி நாதப் பெரு மானுடைய பரம உபகாரத்தை எண்ணி உருகியது. உடனே பேச வேண்டுமென்று எண்ணியும் என்னால் பேச முடியவில்லை. சிறிது நேரம் கழித்துப் பேசினேன்; 'ஐயா, உங்களால் எனக்கும் அருணகிரிநாதப் பெருமானுடைய திருவாக்கின் சிறப்புப் புலனாயிற்று. கந்தர் அலங்காரத்தின் பயனைச் சொல்லும்போது, கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன்னூல் அலங்காரம் நூற்றுள் ஒருகவி தான்கற் றறிந்தவரே என்று சொல்லியிருக்கிறார். அதை வெறும் சொல்லளவில் நான் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது எத்தனை பொருளுடை யது என்பதை உங்கள் வாயிலாக இன்று அறிந்தேன். முருக னுடைய திருவருள் இன்று எனக்கு இந்த உரையை உணர்த்தியது. என்றைக்கும் இதை நான் மறக்கமாட்டேன்' என்று சொன்னேன். 462