பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாபப் புரவியும் தனிவேலும் ஒன்றே நிலைத்து நிற்பது என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதனால் சிவபெருமானை முதலில் இறைஞ்சி முருகப் பெருமானுடைய திருஅவதாரம் ஏற்படுவதற்குக் காரணமான விண்ணப்பத்தைச் செய்து கொண்டார்கள். முருகப் பெருமான் திரு அவதாரம் செய்த பிறகு அவனையே அணுகி வழிபட்டுக் கெஞ்சிக் கூத்தாடி நின்றார்கள். அதன் பின்னே இப்போது முருகன் சூரபன்மனோடு போர் செய்யப் புறப்படுகிறான். தேக்கம் சூரன் இமையோர்களுடைய காலில் விலங்கை பூட்டியிருக் கிறான். அவர்களுடைய காலில் பூட்டிய விலங்கைத் தறிப் பதற்காக இங்கே முருகன் தன் சிற்றடியில் பூங்கழலைக் கட்டிக் கொள்கிறான். தேவலோகத்தை அண்டம் என்று சொல்வார்கள். அங்கே வாழும் அமரர்களை அண்டர் என்பர். அவர்கள் இமையா நாட்டம் பெற்றவர்கள். ஆகையால் இமையோர் என்ற பெயர் வந்தது. இமையிலே சிறப்பு உடையவர்கள் என்று பொருள். சூரனுடைய கொடுமைக்கு ஆளாவதற்கு முன்பு இமையவர் களாகிய தேவர்கள் தங்கள் தங்கள் செயல்களை முறையாகச் செய்து கொண்டு வந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை என்னும் ஆறு ஒடிக் கொண்டிருந்தது. வருணன் மழை பெய்வித்தான். வாயு எங்கும் ஒடி உலகத்தவரின் மூச்சாக நின்றான். அக்கினி ஒளியையும், வெப்பத்தையும் கொடுத்துப் பொருள்களை எல்லாம் பக்குவப்படுத்தினான். வெவ்வேறு தேவர்கள் தங்கள் தங்களுக்கு அமைந்த செயல்களை முறையாகத் தவறு இல்லாமல் செய்து கொண்டு வந்தார்கள். இயந்திரத்தின் ஒவ்வோர் உறுப்பும் வேகமாக இயங்குவது போலத் தேவர்களும் அவர்களுடைய தலைவனாகிய இந்திரனும் தங்கள் தங்களுக்குரிய செயல்களை வேகமாகச் செய்து வந்தார்கள். முன்னைப் பிறவிகளில் செய்த புண்ணியவசத்தால் தேவ பதவி பெற்றவர்கள் ஆதலின் அதற் குரிய பயனாகிய போகத்தையும் தடையின்றி அநுபவித்து வந்தார் கள். அவர்களுடைய செயல் ஒட்டத்தில் இன்ப ஒட்டமும் அமைந் திருந்தது. சூரபன்மன் குறுக்கிட்டான். தேவேந்திரனுக்கு எதிராக அசுரேந்திரனாகிய அவன் வந்து நின்றான். அவனுடைய நிழலில் 35