பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாபப் புரவியும் தனிவேலும் அதுபோல் அருணகிரியார் இங்கே முருகப் பெருமானுடைய அரிய வீரத்தை எடுத்துச் சொல்கிறார். அவன் கையிலே படை எடுத்துப் போர் செய்ததைக் கண்டு படைகள் நடுங்கவில்லை. அதற்கு முன்பே மயில் நடந்த நடையிலே கதிகலங்கிப் போய் அந்தப் படைகள் குலைந்தனவாம். தேங்கிய அண்டத்து இமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள், கலாபப் புரவியிசை தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளம். கந்தபுராணத்தில் யுத்த காண்டத்தில் சூரபன்மனுடைய போர் மிக விரிவாகச் சொல்லப்பெற்றிருக்கிறது. அருணகிரிநாதப் பெரு மான் இந்த ஒரு பாட்டிலே அதைச் சொல்லிவிடுகிறார். முத லிலே யுத்த சந்நத்தனாக ஆண்டவன் எழுந்தருளுகிறான். பின்பு யுத்த களத்திற்கு வருகிறான். அதன் பின்பு போர் செய்கிறான். அதை இரண்டு வரிகளில் சொல்லிவிடுகிறார். வேலின் செயல் கலாபப் புரவி வந்த பிறகு அவன் தன்னுடைய வேலை எடுத்தான். அதை வாங்கி அனுப்பினான். இடையிலே நின்ற குன்றங்கள் எட்டும் குலைந்து போய் வழிவிட்டனவாம். சூரபன்மன் குன்றங்களைத் தன் ஏவலைச் செய்யும்படி வைத்து, அவற்றையே எல்லைக் கற்களாக அமைத்து, தனக்கு நிகர் யாரும் இல்லை என்று தருக்கி நின்றான். முருகன் தன் ஒப்பற்ற வேலை எடுத்து விட்டான். வேல் அந்தக் குலமலைகள் எட்டையும் இடத்தினின்றும் பெயரச் செய்துவிட்டது. 'முருகன் புரவியின் மேலே வருகிறான். அவனுக்கு நாம் வழிவிடவேண்டும். அவன் வருவதை இந்த வேல் தெரிவிக்கிறது' என்று நினைத்தது போல, அந்த வேலை அனுப்பியவுடன் குன்றங்கள் எட்டும் வழிவிட்டன என்று சமத்காரமாகச் சொல்கிறார். தனிவேல், வாங்கி அனுப்பிடக் குன்றங்கள் எட்டும் வழிவிட்டவே. வாங்குதல் - பிரயோகம் செய்தல், தன் கையில் உள்ள ஒப்பற்ற ஞானசக்தியாகிய வேலை முருகன் சூரனை நோக்கி அனுப்பி னான். இடையில் உள்ள குன்றங்கள் எல்லாம் பிறழ்ந்து சிதைந் 39