பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தன. சூரன் அழிந்தான் என்று சொல்லவில்லை. சூரனுடைய தளம் முறிந்துவிட்டது, மலைகள் எல்லாம் சிதைந்தன என்று சொல்லி, சூரசங்காரத்தைக் குறிப்பினால் பெற வைத்தார். வேலும் மயிலும் இந்தப் பாட்டில் அருணகிரியார் முருகப் பெருமானுடைய பெருமையைத் தலைமையாக வைத்துச் சொல்லவில்லை. அவ னுடைய வேல், மயில் என்பவற்றின் பெருமையைச் சொல்லவே இந்தப் பாட்டைப் பாடினார். பெருமாளைப் புரவியானது தன் மிசைத் தாங்கி நடக்கச் சூரன் தளம் முறிந்தது, வேலை வாங்கி அனுப்பக் குன்றங்கள் எட்டும் வழிவிட்டன என்று வருணிக் கிறார். இந்த வருணனை கலாபப் புரவியின் பெருமையையும், தனி வேலின் பெருமையையும் சொல்கிறது. வேலும் மயிலும் என்று அந்த இரண்டையும் ஒருசேரக் கூறுவது முருகன் அடியார் களுக்கு வழக்கம். 'பயந்ததனி, வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே” என்றும், "என்றும் வாய்த்ததுணை, கிரணக் கலாபியும் வேலுமுண்டே' என்றும் முன்னாலே சொன்னதை நாம் பார்த்தோம். தனித்தனி யாகவும் வேலின் பெருமையையும், மயிலின் பெருமையையும் சில பாடல்களில் விரிவாகச் சொல்லியிருக்கிறார். 'ஆடும் பரிவேல்' என்று கந்தர் அநுபூதியிலும் இவற்றைச் சேர்த்துச் சொல்கிறார். இந்தப் பாட்டில் யுத்த சந்நத்தனாக இருக்கும் முருகனைக் காட்டி அப்போது மயிலும் வேலும் என்ன என்ன செய்கின்றன என்பதைச் சொன்னார். 大 தேங்கிய அண்டத்து இமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவியிசை 40