பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு அதற்கு மாறாகத் துன்பம் வருவதற்கு முன்பே, "ஐயோ வந்து விடுமே!’ என்று அச்சத்தில் ஆழ்ந்திருப்பதே ஒரு பலவீனம். வியாதி இல்லாதவன் தனக்கு வியாதி வந்துவிட்டதாக எண்ணி னால் அவனுக்குச் சோர்வு தட்டும். அப்படிப் பலர் உலகில் இருக்கிறார்கள். அதை 'ஹைபோகாண்ட்ரியா (Hypochondria) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அது ஒருவகைக் கிலியாகும். தனக்கு நோய் இருப்பதாகப் பல தடவை எண்ணுவதனால் வரும் நிலை அது. நெஞ்சத் திண்மை உள்ளவன் இத்தகைய சோர்வுக்கு ஆளாக மாட்டான். நமக்கு வரும் துன்பத்தை நிச்சயம் போக்கிக் கொள்ள லாம் என்று உறுதியாக நம்பினால் தளர்ச்சி நீங்கும்; மேன்மேல் வேண்டியதைச் செய்யும் கிளர்ச்சி எழும். 'நமக்கு நோய் இல்லை; துன்பம் இல்லை' என்று இடைவிடாமல் எண்ணுவதே ஒரு வகையான பரிகாரம். இதை 'ஆட்டோ ஸஜ்ஜெஷன் (Ato suggestion) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அந்த இயல் புடையவர்களுக்குத் துன்பத்தை வெல்லும் உறுதி உண்டாகும் என்று மன இயல்பை அறிந்தவர்கள் சொல்வார்கள். மேனாட்டு அறிஞர்கள் அதுபற்றிப் புத்தகங்கள் சில எழுதியிருக்கிறார்கள். திருவள்ளுவர் இதைச் சொல்கிறார். மனத்திண்மை உடைய வர்களுக்குத் துன்பத்தை அலட்சியம் செய்யும் நிலை உண்டாகும் என்கிறார். துன்பம் அத்தகையவர்களைத் துன்புறுத்தாமல், தானே துன்பத்தை அடையுமாம். 'இடும்பைக் கிடும்பைப் படுப்பர் இடும்பைக் கிடும்பைப் படாஅ தவர்' இயற்கையாகவே மனம் திண்மையாக இருந்து, 'நமக்குத் துன்பம் இல்லை; நம்மைத் துன்பம் ஒன்றும் செய்யாது' என்று எப்போதும் உறுதியாக எண்ணுகிறவர்களுக்கு நன்மை உண் டாகும் என்பதைப் பலர் உணர்கிறார்கள். அந்தத் திண்மையோடு ஒரு பற்றுக்கோடும் கிடைத்துவிட்டால் துன்பத்தைத் திண்ண மாகப் புறங்கண்டுவிடல்ாம். எல்லோருமே தம்முடைய பாவனை யினால் உறுதியான நெஞ்சைப் பெறுவது அருமை. ஆனால் உறுதியை உண்டாக்கும் துணையைப் பற்றிக் கொண்டால் நெஞ்சத் திண்மை உண்டாகும். 43