பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 உறுதிக்கு ஏற்ற துணை - தளர்ந்துபோன கிழவனுக்கு உதவியாகக் கோல் இருக்கிறது. தானே நடக்க முடியாத குழந்தை அன்னையின் கையைப் பற்றிக் கொண்டு நடக்கிறது. இருவருக்கும் தாமே நடக்கும் வன்மை இல்லை. கிழவனும் குழந்தையைப் போல் யாரையாவது பற்றிக் கொண்டு நடக்கலாம். ஆனால் அவனை அணுகுவார் யாரும் இல்லை. அவனைக் கண்டாலே மக்கள் அருவருக்கிறார்கள். அதனால் உயிரில்லாத கோலை ஊன்றி நடக்க வேண்டியிருக் கிறது. குழந்தை இன்னும் நடக்கவே ஆரம்பிக்கவில்லை. கிழவனோ எத்தனையோ வகைகளில் நடந்து தளர்ந்து போய் விட்டான்; அதுபோல் மனம் நடக்கத் தெரியாமல் இருக்கலாம். அல்லது பொல்லாத நடை நடந்து தளர்ந்திருக்கலாம். அது இப் போது நிமிர்ந்து நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் துன்ப மின்றி இருக்கும். அதற்கு ஒரு தக்க பற்றுக்கோடு வேண்டும். அது இருந்துவிட்டால், நமக்கு எத்தகைய தீங்கும் வராது என்ற உறுதியோடு இருக்கலாம். அப்படித் தீங்கு வந்தாலும் அதனால் துன்பம் உண்டாகாது என்ற தைரியம் வரும். அந்தப் பற்றுக்கோடு எது? ஆண்டவன்தான். 'சிற்றம்பலம் மேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே' என்று திருஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். நம்முடைய நாட்டில் இருந்த பெரியோர்கள் இறைவனிடம் உறுதியான நம்பிக்கை வைத்து நலம் பெற்றார்கள் என்பதை வரலாறுகளிலிருந்து உணர்கிறோம். அவர்கள் வரலாறுகள் இருக் கட்டும். மேல்நாட்டில் இன்று விஞ்ஞானம் பல வகையில் முன் னேறியிருக்கிறது. மனிதன் ஐந்து பூதங்களையும் தன் மனம் போல ஏவல் செய்யும்படி ஆக்குவதற்கு விஞ்ஞானம் துணை புரிகிறது. ஒரே கணத்தில் பல லட்சம் பேர்களைக் கொல்லும் அணுகுண்டை விஞ்ஞானத்தின் உதவியால் கண்டுபிடித்திருக் கிறார்கள். அதை முதலில் கண்டுபிடித்து ஜப்பான் நாட்டில் வீசியவர்கள் அமெரிக்க நாட்டினரே. அமெரிக்க நாகரிகத்தையும், விஞ்ஞான முன்னேற்றத்தையும் பார்த்தால் கடவுளையே மறந்து 44