பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு விட்டு வாழ்கிறவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த நாட்டில் பழைய வழிபாட்டு முறைகளை எள்ளி நகையாடும் சிலர், விஞ்ஞானத்தைப் பாராட்டியும், மெய்ஞ்ஞானம் என்று நாம் கூறுவதை இகழ்ந்தும் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். விஞ்ஞானத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத அவர்களே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கும்போது, விஞ்ஞானத்தால் அற்புதச் செயல்களைச் செய்யும் அமெரிக்க நாட்டினருக்குக் கடவுளைப் பற்றி என்ன அக்கறை? அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கை உண்மை அது அன்று. அமெரிக்காவில் உள்ள மக்களில் யாரேனும் சிலர் கடவுளைப் பற்றிக் கவலைப் படாதவர்களாக இருக்கலாம். விஞ்ஞானிகள் கடவுள் உண்மையை மறுத்துப் பேசுவதில்லை. தெய்வபக்தியும், தெய்வத்தினிடம் திண்ணமான நம்பிக்கையும் உள்ள பலர் அந்த நாட்டில் வாழ்கிறார்கள். நம்மைக் காட்டிலும் அதிகமாக இறைவனிடம் இந்த நூற்றாண்டில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அவர்கள் என்றுகூடச் சொல்லலாம். அண்மையில் நான் ஒரு புத்தகம் படித்தேன். கடவுளிடம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து அதனால் நன்மை பெற்றவர்கள் ப்லர் எழுதிய கட்டுரைகளின் தொகுதி அது. அதன் முகவுரையில், “சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 1945-இல் அறிவுக் கொள்கை களும் உலகாயதக் கொள்கைகளும் நிறைந்த உலகத்தில் அணு குண்டு உற்பத்தியாயிற்று. அதனால் மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வழியைப் பெற்றுவிட்டான். அந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் நியூயார்க்கில் ஒரு சிறிய நகரத்தில் பலசரக்குக் கடையில் ஒரு சிறிய அறையில் கைட்போஸ்ட்ஸ்’ என்ற மாத வெளியீடு ஆரம்பமாயிற்று. உலகத்தின் இருள் படர்ந்த பகுதிக்கு ஒளியைக் கொணர்வது அதன் நோக்கம். அணுகுண்டு உலகத்தில் பயத்தை நிரப்பியது. ஆனால் இந்த வெளியீடோ நம்பிக்கை ஒளியைப் பரப்பியது. இரண்டுக்கும் மாறுபாடு மிகப் பெரிது. ஆனால் இரண்டும் உலகத்தின் தோற்றத்தை மாற்றுவதற் குரிய அடிப்படையான நோக்கத்தை உடையவை. ஒன்று அபார 1. "New Guide Posts' - Edited by Norman Vincent Peale, Prentice Hall. Inc. New York, 3rd printing, January, 1954. 45