பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு உண்மை விளங்கும்" என்று திருவாய் மலர்ந்தருளினான். அரசன் அந்தணனையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குச் சென்று தனியே மறைவாக நின்றிருந்தான். அவர்களுடைய கண்ணுக்கு அப்போது ஒரு தோற்றம் உண்டாயிற்று. அங்கே திருமணக் கோலத்துடன் மனையில் உட்கார்ந்திருந்த மணப் பிள்ளையின் உயிரைக் கொண்டு போவதற்காக இரண்டு எம தூதர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருப்பது அரசனுக்கும், அந்தணனுக்கும் புலனாயிற்று. "இவன் கட்டிளங் காளையாக இருக்கிறான். ஒருநோயும் இல்லை. இவன் உயிரை எப்படிக் கொண்டு போவது?" என்று ஒருவன் கேட்டான். அதற்கு மற்றொருவன், 'இது ஒரு பிரமாதமா? அன்றைக்கு அந்தப் பிராமணப் பெண்ணினுடைய உயிரை நாம் கொண்டு போக வில்லையா? மரத்தின்மீது தொத்திக் கொண்டிருந்த அம்பைக் காற்றினாலே அவள்மீது பாயச் செய்து அவள் உயிரைப் போக்க வில்லையா? அத்தகைய தந்திரத்தை இங்கேயும் செய்தால் போகிறது. அதோ ஒரு மாடு கட்டியிருக்கிறதே; அந்தப் பசுமாடு தாலி கட்டும் போது அடிக்கிற வாத்திய முழக்கத்தில் மிரண்டு, கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவந்து, இந்த மணமகனை முட்டித் தள்ளிவிடும். அவனைக் சொல்வதற்கு இதுதான் தந்திரம்' என்று சொன்னான். அரசன் காதில் இந்தப் பேச்சு விழுந்தது. உடனே அந்தணனை நோக்கி, 'பார்த்தாயா? உன் மனைவியை வேடன் கொல்லவில்லை. காற்றாலே விடுபட்ட அம்பு செய்த காரியம் அது' என்று சொன்னான். அந்தணன் அந்தப் பேச்சை நம்பவில்லை. "இங்கே நாம் கேட்ட வார்த்தைகளின்படி நடக்குமானால் அதை யும் நான் நம்புவேன்' என்று சொல்லி, 'இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம்' என்றானாம். அவர்கள் இரண்டு பேரும் அங்கே தங்கியிருந்தார்கள். காலதூதர்கள் பேசினபடியே நிகழ்ச்சி நடந்தது. பின்பு அரசன் வேடனை விடுதலை செய்தான். புதிய கதை முடிவு காண இயலாத வழக்குக்கு ஆண்டவனுடைய திருவருளால் முடிவு கண்டான் பாண்டியன். அது ஏதோ பழங் கதை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அதைப் போலத்தான் இந்த அமெரிக்க வக்கீல் சொல்கிற உண்மை நிகழ்ச்சியும் இருக் 43