பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அவரைக் கேட்கலாம். அவர் சொல்கிறார்: "நான் ஒரு தவமும் செய்யவில்லை. யோகமோ இந்திரிய நிக்கிரகமோ நான் செய்ய வில்லை. மிகவும் எளிய காரியம் ஒன்றைச் செய்தேன். மைவரும் கண்டத்தர் மைந்த கந்தா என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தேன். இதை அன்றி வேறு எதையும் நான் அறியேன். உடம்பை வருத்தியும், உணவைக் குறைத்தும், பேச்சை அடக்கியும் பலர் தவம் செய் கிறார்கள். ஆனால் என்னுடைய மனம் அந்த வகையில் செல்ல வில்லை. நான் அவன் திருநாமத்தைச் சொல்லிச் சொல்லி வாழ்த் தினேன்' என்கிறார். "இப்படி வாழ்த்தும் தொண்டன்றி வேறு ஒன்றும் நான் அறியேன்” என்கிறார். முருகனை அவர் வாழ்த்துகின்ற விதத்தைப் பார்க்கலாம். மைவரும் கண்டத்தர் மைந்த, கந்தா 'நீலகண்டப் பெருமானுடைய திருக் குமாரனே' என்பது முதல் வாழ்த்து. செல்வர்களின் நிலை ஏழைகள் வெளியூருக்குப் போவதற்குப் பயப்படுவதில்லை. பணம் படைத்தவர்களோ வேறு இடங்களுக்குப் போவது என்றால் சற்றே தயங்குகிறார்கள். சுகமாக வீட்டில் படுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் வெளியில் போனால் உணவுக் கும், உறக்கத்திற்கும் வேண்டிய வசதிகள் இருக்குமோ என்று யோசிப்பார்கள். 'அங்கே தக்க உணவுச் சாலை இருக்குமா? போவதற்கு வண்டியில் முதல் வகுப்பில் இடம் கிடைக்குமா?" என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து அவற்றை எல்லாம் தெரிந்து கொண்டபின்தான் போவார்கள். இந்த வசதிகள் கிடைக்கவில்லை என்றால் பிரயாணத்தைக் கைவிடுவார்களே யொழிய, எப்படி இருந்தால் என்ன என்று போக மாட்டார்கள். சுகத்தில் சிறிதளவு கூடக் குறையக் கூடாது என்பது அவர்கள் எண்ணம். ஏழைகளோ எந்தச் சிறிய வசதி இருந்தாலும் போதும் என்று வாழ்கிறார்கள். அவர்களுக்குப் பெரிய துன்பம் வந்தாலும் அதனை ஏற்று நிற்கின்ற தைரியம் இருக்கும். தைரியம் என்பதைவிடப் பழக்கம் என்று சொல்வது சிறப்பு. பணக்காரர்களுக்குச் சிறிய துன்பம் வந்தாலும் மிகப் பெரிதாக இருக்கும். 56