பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 நம்மிடம் அவை இப்படிப் பழகுவது இல்லை. நம்முடைய மனத்தில் இறைவன் பாலுள்ள உறுதியானது எல்லா உயிர்களிடத் திலும் உள்ள அன்பாக விரியும்போது அந்த உயிர்கள் நம்மைக் கண்டு அஞ்சாத நிலை உண்டாகும். அவர்கள் சர்வபூத தயாபரர் களாக விளங்குவார்கள். அப்போதுதான் பரமேசுவரனிடத்திலிருந்து இடையறாத பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைக்கும். சுகப் பிரம்மம் பிறந்தவுடன் வெளியே கிளம்பி விட்டாராம். வியாசபகவான், 'குழந்தாய்' என்று அவரை அழைத்தபோது எல்லா மரங்களும், எல்லாப் பொருள்களும், 'ஏன், ஏன்?" என்று கேட்டனவாம். சுகமுனிவர் எல்லாம் தாமாகவே இருக்கும் நிலையை உடையவராக இருந்தார். அதனால் மரங்களும் மட்டை களும் விலங்குகளும் ஏன் என்று கேட்டதாகப் பாகவதம் கூறும். யாருக்கு இறைவனிடத்தில் அன்பும், அது காரணமாக எல்லா உயிர்களிடத்தில் தயையும் உண்டாகின்றனவோ அவன் அபயனாக வாழ்வான். அவனுக்குப் பிறன் ஒருவனால் அச்சம் உண்டாக நியாயம் இல்லை. நாம் வேறு, பிறர் வேறு என்று வாழ்கிறவர்களுக்குத்தான் அத்தகைய அச்சம் உண்டாகிறது. நம்முடைய உள்ளத்தில் இருக்கிற பேதமே, உலகம் என்கிற கண்ணாடியில் எதிர் ஒளி காட்டுகிறது. நாம் பல கனவுகளைக் காண்கிறோம். அந்தக் கனவுகள் எல்லாம் நம்முடைய அடி மனத்தில் இருக்கிற ஆசைகளையும், குறைகளையும் நிரப்புகின்ற கனவுகளாக இருக்கும். உண்மையாக இறைவனிடத்தில் பற்றுக் கொண்டு வாழ்ந்திருந்தால் கனவிலும் நனவிலும் தைரியம் ஊட்டு கின்ற நிகழ்ச்சிகளையே காணலாம். எத்தனை கற்றாலும் இந்த மனநிலை நமக்கு வருவது இல்லை. கற்கக் கற்க நம்முடைய சந்தேகங்கள் அதிகமாகின்றன. நம்பிக்கை குறைகிறது. அகங் காரம் மிகுதியாகிறது. இவ்வளவும் இறந்துபோகும்போது நமக்குப் பயன் தருவது இல்லை. ஆகையால் மரண சமயத்தில் நம் முடைய வாழ்வில் அச்சம் இல்லாமல் உறுதி வரவேண்டுமானால் இப்பொழுதிலிருந்தே பழக்கம் செய்துகொள்ள வேண்டும். நாம் கற்ற கல்வி அத்தனையும் அப்போது கை கொடுப்பது இல்லை. மைவரும் கண்டத்தர் மைந்த கந்தா என்று சொல்லும் கைவரும் தொண்டே பலிக்கும். இதை அருணகிரியார் சொல்கிறார். 62