பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 முடியுமா? அது நடக்காத காரியம். எவ்வளவு அன்பு உடையவர் களாக இருந்தாலும் போகிற உயிரைத் தடுக்க முடியாது. அவர்கள் தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று ஏங்கிக் கதறி அழுகிறார்கள். அவர்களால் ஆனது அது ஒன்றுதான். பைவரும் கேளும் பதியும் கதற. (பைவரும் - துன்புறும். கேள் - உறவினர். பதி - ஊரினர்) ஐவர் நமக்குச் சுகமும் துக்கமும் இந்திரியங்களின் வாயிலாக வரு கின்றன. நல்ல வார்த்தைகள் காதின் வழியே புகுந்து மகிழ்ச்சியைத் தருகின்றன. யாரேனும் வைதால் அதுவும் காதின் வழியே புகுந்து துன்பத்தை உண்டாக்குகிறது. இனிப்பான பொருளை உண்டால் இன்பம் உண்டாகிறது. கசப்பை உண்டால் வெறுப்பு உண்டாகிறது. இப்படியே ஐம்பொறிகளும் உலகத்துப் பொருள் களை நுகரச் செய்து, அதனால் இன்ப துன்பங்களை உண்டாக்கு கின்றன. உடம்பில் இந்த ஐந்து இந்திரியங்களும் இருந்து நம் வாழ்க்கையை நடத்துகின்றன என்றுகூடச் சொல்லலாம். 'எனக்கு நன்றாயிருக்கிறது" என்று உண்ணும் உணவைச் சொல்கிறோம். 'என் நாவுக்கு நன்றாக இருக்கிறது' என்று சொல்லாமல் நாவே நாம் என்று நினைக்கும்படி பேசுகிறோம். அப்படியே, 'எனக்கு இத்தனை சூடு வேண்டாம்' என்று வெந்நீரில் கை வைத்துப் பார்த்துச் சொல்கிறோம். பரிச இந்திரியமும் நாமும் ஒன்றே என்ற பாவனையில் வருகிற பேச்சு அது. 'நான் பார்த்துச் சகிக்க முடியாது' என்பது கட்புலனோடு உள்ள ஒற்றுமையில் கூறுவது. இப்படி ஐம்பொறிகளோடும் வேற்றுமையின்றி ஒன்றுபட்டு வாழ்கிறோம். உயிருக்கும் உடலுக்கும் உள்ள ஒட்டுறவு இந்திரி யங்களுக்கும் உண்டு. நம் வாழ்நாள் முழுவதும் வேறுபாடின்றிப் பழகி நிற்கும் அந்த ஐந்து இந்திரியங்கள் மரண சமயத்தில் எப்படி இருக்கின்றன? சில நண்பர்கள் பொருள் வளம் நமக்கு உள்ள காலத்தில் உடன் இருந்து இன்பம் நுகர்வார்கள். கை சளைப்பது தெரிந்தால் மெல்ல நழுவி விடுவார்கள். அதுபோல நம்முடன் இவ்வளவு பழகி நிற்கும் ஐம்பொறிகளும் மரணம் வருவதற்கு முன்பே 64