பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அவனுடைய திருவடியே புகலாகப் புகும் அன்பர்கள் அவனைச் சென்று அடைகிறார்கள். யார் கைவிட்டாலும் அவன் அவர்களைக் கைவிட மாட்டான். போகிற உயிரோடு சென்று நலம் செய்யும் ஆற்றல் உறவினர்களுக்கு இல்லை. கடலின் ஆழத்தில் ஒருவன் ஆழ்ந்துவிட்டால், அவனுடன் செல்லும் ஆற்றல்கூட அவர்களுக்கு இல்லை. அப்படி இருக்க, கண்ணுக்குத் தெரியாத உயிர் எங்கே செல்கிறது, என்ன துன்பம் அடைகிறது என்று தெரிந்து கொள்ளவே முடியாத நிலையில் அவர்களால் என்ன செய்ய முடியும்? உயிர் எங்கே சென்றாலும் அங்கே இருப்பவன் இறைவன். உயிர் எவ்வளவு நுட்பமாக இருந்தாலும் அதனூடே பின்னும் நுட்பமாக இருப்பவன் இறைவன். ஆதலின் அவன் ஒருவன்தான் உயிர் எங்கே எப்படிச் சென்றாலும் துணையாக நின்று உதவ முடியும். அதனால், 'மற்றவர்களோடு பழகுகிறேன்; இந்திரியங் களோடு வாழ்கிறேன்; ஆனாலும் அவர்கள் உடம்பு இருக்கு மட்டுந்தான் என்னுடைய தொடர்புடையவர்களாக இருக்க முடியும். ஆகவே உடம்பை விடும்போது நீதான் எனக்குத் துணை. அப்போது நான் உன் அடைக்கலம்' என்று விண்ணப்பித்துக் கொள்கிறார் அருணகிரியார். Yor மைவரும் கண்டத்தர் மைந்த,கந் தா,என்று வாழ்த்தும்இந்தக் கைவரும் தொண்டன்றி மற்றறி யேன்,கற்ற கல்வியும்போய்ப் பைவரும் கேளும் பதியும் கதறப் பழகிநிற்கும் ஐவரும் கைவிட்டு மெய்விடும் போதுன் அடைக்கலமே. மை போன்ற கரிய நிறம் வந்து அமைந்த திருக்கழுத்தை உடைய சிவபெருமானுடைய புதல்வனே, கந்தா என்று வாழ்த்துகின்ற இந்தக் கைமேல் பயன்வரும் திருத்தொண்டை யன்றி வேறு ஏதும் அறியாதவன் நான்; நான் கற்ற கல்வியும் எனக்குத் துணையாகாமல் அகன்று போக, துன்புறும் உறவினரும் ஊரினரும் அழுது புலம்ப, என்னுடன் ஒட்டி உறவாடிப் பழகி நிற்கும் ஐம்பொறிகளும் என்னை விட்டுவிட, நான் - 66