பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிய வழி பின்பற்ற வேண்டியது யோகிகளுக்கு மிகவும் அவசியமாகும். தியானம் செய்வதற்கு உட்கார்ந்தால் வயிறு நிரம்பச் சாப்பிட்ட வனுக்குத் தூக்கம் வருமேயன்றித் தியானம் கைகூடாது. பரீட்சைக்கு வாசிக்கும் மாணாக்கன்கூட வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டா னானால் புத்தகத்தைத் தலையணையாக வைத்துத் தூங்கத்தான் தூங்குவான். ஏதேனும் ஒரு காரியத்தில் புகுகின்றவர்களுக்கே உணவில் வரையறை வேண்டுமானால், மூச்சை அடக்கி யோகம் செய்பவர்களுக்கு நிச்சயமாக உணவில் வரையறை வேண்டும். தாமச குணம் இல்லாத உணவை உட்கொள்ள வேண்டும். ஆசனம் நியமத்திற்கு அடுத்த படியாக வருவது ஆசனம். ஆசனம் என்றால் இருக்கை; உட்காருகிற முறை. நாம் ஒரிடத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்க முடியவில்லை. கால்களைச் சம்மணம் போட்டு உட்காருகிற வழக்கம் வர வர நமக்கு மறந்துவிட்டது. நாற்காலியும், பெஞ்சியும் உபயோகப்படுத்துகிற நாம் தரையில் வெகுநேரம் உட்காரச் சக்தி இல்லாமல் இருக்கிறோம். நாற்காலி யில் உட்காருவதனால் நமக்குச் சில வியாதிகள் வருகின்றன. ஆசனத் துவாரம் அடைபட உட்காருவதனால் மூலம் முதலான வியாதிகள் வருகின்றன. ஆனால் நம் நாட்டுக்கு ஏற்றபடி சம்மணம் போட்டு உட்கார்ந்தால் அத்தகைய வியாதி எதுவும் வருவது இல்லை. இப்போது தரையில் உட்காருவதே கஷ்டமாக இருக்கிற காலம். யோக மார்க்கத்தில் ஆசனங்கள் பலவகையாகச் சொல்லப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது பத்மாசனம். 84 வகையான ஆசனங்களைச் சொல் கிறார்கள். இப்பொழுதெல்லாம் யாரையாவது யோகி என்று சொன்னால் அவருக்கு ஆசனம் போடத் தெரியும் என்றுதான் நாம் நினைக்கிறோம். ஆசனத்தோடு நின்றுவிடுவது யோகம் ஆகாது. பலர் ஆசனப் பயிற்சியைக் காட்டி அதனால் பொருளை ஈட்டு கிறார்கள். உடம்பிலுள்ள உறுப்புகள் சரியான வகையில் இயங்கு வதற்கு ஆசன வகை பயன்படும். பிராணாயாமம் நம்முடைய உள்ளம் இறைவனிடத்தில் ஈடுபடுவதற்குச் சுவாச பந்தனம் செய்ய வேண்டுமென்று யோகிகள் கூறுகிறார்கள். 71