பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கள். எல்லாவற்றுக்கும் மேலாகப் பிரம்மரந்திரம் என்று சொல் கிற இடத்தில் ஆயிரம் இதழ்களுடைய கமலம் இருக்கிறது என்றும் அங்கேதான் சோதி வடிவமாக அம்பிகை எழுந்தருளி யிருக்கிறாள் என்றும் நூல்கள் கூறும். மூலாக்கினி மெல்ல மெல்லச் சென்று அங்கே முட்டினால் அங்கிருந்து அமுதம் ஒழுகும் என்பார்கள். அந்த இடம் சந்திரமண்டலம் என்று சொல்லப்படும். அந்த அமுதத்தைச் சாப்பிடுகிறவர்களுக்கு நரை திரை மூப்பு ஆகியவை கழன்றுவிடும். இத்தகைய யோக நெறியைப் பற்றிப் பல புத்தகங்கள் வடமொழியில் உள்ளன. ஸ்ர் ஜான் உட்ராப் என்ற ஆங்கிலேயர் இந்த முறையை ஆராய்ந்து புத்தகம் எழுதி யிருக்கிறார். யோகமும் அன்பும் எட்டு வகையாகச் செய்கிற அட்டாங்க யோகத்தில் கடைசி நிலை சமாதி. அது கைகூடுகிற வரைக்கும் யோகிகள் பயிற்சி செய்துகொண்டு வரவேண்டும். யோக முறையில் ஈடுபடுகிறவர் களுக்கு அத்தனை தூரம் செல்வதற்குரிய வாய்ப்புக் கிடைப்பது இல்லை. சில சமயங்களில் இடை வழியில் சில அதிசயங்கள் அவர்களுக்குப் புலனாகும். சில அற்புதங்கள் செய்கிற ஆற்றல் வரும். அந்த அளவில் நின்று தாம் பெறவேண்டியவற்றைப் பெற்றுக்கொண்டவர் போல அவர்கள் ஏமாந்து போவார்கள். இப்போதுள்ள யோகிகள் எல்லோரும் பெரும்பாலும் ஆசனத் தோடு நின்று அதைக் காட்டித் தம்மைப் பெரிய சக்தி உள்ளவர் களைப் போல மக்கள் எண்ணிக் கொள்ளும்படி செய்கிறார்கள். எத்தனைதான் யோகம் செய்தாலும் மனம் இறைவனிடத்தில் அன்பு கொண்டிருந்தாலன்றி அது கைகூடாது. அடித்துச் சிங்கத்தை மடக்கலாம் என்றால், அந்தச் சிங்கம் ந்தச் சமயத்தில் தப்பலாம் என்றே எண்ணும். தப்புவதற்கு ார்க்கம் இருந்தால் தன்னை அடக்குபவனையும் அது கொன்று விடும். அதுபோலத்தான் யோகத்தினால் மனத்தை அடக்குவது. அப்படியின்றி, இறைவனிடத்தில் பக்தி செய்து மனத்தை உருகச் செய்து நிறுத்தினால் அது என்றும் மாறாமல் ஒரே நிலையில் இருக்கும். இந்த நாட்டில் யோக நெறியில் போகிறவர்கள் மிகச் சிலர். யோகத்தைப் பற்றிப் பேசுகின்ற வர்கள் லட்சக்கணக்கில் உள்ளார்கள். யோக நெறியில் சென்று நோய்வாய்ப்பட்டு 74