பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கீழே வைத்துவிட்டால் உருண்டு உருண்டு கீழேதான் வந்து விழ வேண்டும். கால் இல்லாத குழந்தையோ கீழே இருந்தபடியே அம்மா அம்மா என்று அழுது கொண்டிருக்கும். அப்போது குழந்தையின் சத்தம் கேட்டுத் தாய் கீழே இறங்கி வந்து அதை அணைத்துக்கொள்வாள். 'நன்றாக அழு' என்று தாய் சிறிது நேரம் பிடிவாதமாகக் கீழே இறங்கி வராவிட்டாலும் கீழிருந்து அழும் குழந்தைக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு அம்மா வரும்வரை காத்திருக்கலாம். ஆனால் அம்மா இருக்கும் இடத்திற்கே சென்றுவிட வேண்டும் என்று மாடிப்படி ஏற ஆரம்பித்தால் ஒழுங்காக ஏறினால்தான் தாய் உள்ள இடத்தை அடையலாம். பெரும்பாலும் அது முடிவ தில்லை. அது தவறிவிட்டாலோ அதன் உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடுகிறது. நம் நாட்டில் படி ஏற முயல்கிற குழந்தைகள் இருக்கின்றன. ஆனால் இன்னும் தாய் இருக்கிற இடத்தை அடைந்த குழந்தைகளைக் காணவில்லை. 'நாமே பலபல படிகளைக் கடந்து ஏறுவது மிகவும் கடினம். அம்மாவைக் கீழே வரும்படியாகச் செய்ய நீ அழு; அழுது புலம்பு’ என்று சொல்வது போல அருணகிரியார் யோகிகளைப் பார்த்து இந்தப் பாட்டைச் சொல்கிறார். இப்படிச் சொல்வதனால் யோகம் செய்வதே தவறு என்று சொல்வதாக நினைக்கக் கூடாது. யோகம், செய்வதற்கு அரிதுதான். அரிதாக இருந்தால் என்ன? செய்து முடிக்கலாம் என்று நினைக்கிறவர்கள் அதற்குரிய தகுதி களை நினைந்து பார்க்க வேண்டும். தகுதியோடு நம்மை வழி காட்டி அழைத்துச செல்லும் குருநாதர் வேண்டும். கரணம் தப்பினால் மரணம் உண்டாகும் ஆபத்து ஒவ்வொரு படியிலும் இருக்கிறது. ஆயிரம் பேர் யோகம் செய்வது என்று ஆரம்பித்தால் 900 பேர் ஆசனத்தில் நின்றுவிடுகிறார்கள். பிரணாயாமம் வரைக் கும் செல்கிறவர் சிலர். அதற்குமேல் உள்ள படியை அடை கிறவர்கள் அநேகமாக இல்லை என்று சொல்ல வேண்டும். மூச்சுத் திணறி வயிறு வெடித்து இறந்து போகிறவர்கள் சிலர். யாரோ இலை மறைவு காய் மறைவு போலச் சித்தி அடை கிறார்கள். அதனால்தான் உயிரின் மீதுள்ள இரக்கத்தால் யோக நெறியைப் பக்தர்கள் எல்லாம் கண்டிக்கிறார்கள். ஆழ்வார்களும் கண்டிக்கிறார்கள். நாயன்மார்களும் கண்டிக்கிறார்கள். 76