பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிய வழி 'துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித் தருத்தி உடம்பை ஒறுக்கிலென் னாம்சிவ யோகமென்னும் குருத்தை அறிந்து முகமாறுடைக்குரு நாதன்சொன்ன கருத்தை மனத்தில் இருத்துங்கண் டீர்முத்தி கைகண்டதே' என்று யோகிகளை நோக்கி அருணகிரியார் முன்பு சொன்ன பாட்டைப் பார்த்தோம். இப்போதும் அதே யோகிகளுக்கு மற்றொரு வகையில் சொல்கிறார். யோகிகளே! விழிநாசி வைத்து மூட்டிக் கபாலம் மூலாதார நேரண்ட மூச்சையுள்ளே ஒட்டிப்பிடித்தெங்கும் ஓடாமற் சாதிக்கும் யோகிகளே என்று யோகிகளை விளிக்கிறார். ஒரு நிமிஷம் மூச்சை அடக்கி னால் நமக்குத் திணறுகிறது. யோகிகளோ எப்போதும் உள்ளும் வெளியும் போய்க்கொண்டிருக்கிற மூச்சைப் பிடித்து எங்கும் ஒடாமல் அப்படியே நிறுத்துகிறார்கள். அதனால் மூலாதாரக் கனலை மூட்டிச் சுழுமுனை வழியே கொண்டு போய்ச் சஹஸ் ராரம் வரைக்கும் எழுப்ப வேண்டுமென்று முயல்கிறார்கள்: அப்படி உள்ளே மூச்சை அடக்கும்போது வயிறு உப்புகிறது. முகம் சிவக்கிறது. கழுத்து வீங்குகிறது. நரம்புகள் புடைத்துக் கொள்கின்றன. அவர்கள் தங்களுடைய விழியை நாசி முனையில் வைத்துத் தியானம் பண்ணுவார்கள். அதற்குத் திராடகம் என்று பெயர். சிலர் புருவத்தின் மத்தியில் பார்வையை அமைத்துத் தியானம் செய்வது வழக்கம். மூக்கின் துனியில் இரண்டு கண் களின் பார்வையையும் வைத்துத் தியானம் செய்வதை நினைத்தே, விழி நாசி வைத்து என்று ஆரம்பிக்கிறார். மூலாதாரத்திலுள்ள அக்கினியைக் கபாலம் வரைக்கும் மூட்டுவதற்காக, மூச்சை உள்ளே ஒட்டிப் பிடித்து எங்கும் ஓடாமல் சாதிக்கிறார்கள் யோகிகள். மூலாதாரம் முதல் பிரம்ம ரந்திரம் வரைக்கும் நேராகச் செல்லும் சுழும்னா நாடி வழியாக மூல அக்கினியானது சென்று கபாலத்தைப் போய்த் தாக்கச் செய்கிறார்கள். கபாலத்திற்கும், மூலாதாரத்திற்கும் நேராகச் சமனாகப் போய்ச் சேருமாறு மூச்சை இயக்குகிறார்கள். வேறு எங்கும் ஓடாமல் பிடித்து நிறுத்துகிறார்கள். 77