பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிய வழி நினைக்கிறீர்கள். காலில் பலமுடைய குழந்தைகளாக எண்ணி இந்த வேலையை ஆரம்பித்துவிடுகிறீர்கள். காலில் திண்மை இல்லாவிட்டாலும், மனத்தில் திண்மை இல்லாவிட்டாலும் தடுக்கி விழ நேரும். அப்போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடலாம். மிகமிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஆண்டவனிடத்தில் மிகமிகத் தாழ்ந்த நிலையில் இருக்கும் நாம் போய்ச் சேருவது மிகவும் தொல்லையான காரியம். குழந்தை அழும் சத்தம் கேட்டவுடனே தாய் எத்தனை வேலை இருந்தாலும், தான் எந்த இடத்தில் இருந்தாலும், வேலைகளை எல்லாம் விட்டுவிட்டுக் குழந்தை உள்ள இடத்திற்கு ஓடிவந்து வாரி அணைத்துக் கொள்வாள். அப்படி எம்பெருமான் தன்னை நினைந்து புலம்பு கிற பக்தனைக் காப்பாற்ற வருவான். குழந்தையாகி நாம் அவனை நினைந்து அழுதால் நாம் இருக்கும் இடத்திற்கே அவனை வரவழைத்துவிடலாம். அது எளிய காரியம். அதைச் செய்யுங்கள். அவன் எப்படி எளியவன் என்று கேட்கலாம். தன்னை நினைப்பவர்களுக்கு மிகவும் எளியன் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுக்கள் உண்டு. இப்போது ஒன்றைச் சொல்கிறேன். காட்டில் வாழ்ந்த வள்ளி நாயகியிடம் அவன் தானே சென்று ஆண்டு கொண்டான்' என்பது போல அருணகிரியார் இந்தப் பாடலைச் சொல்கிறார். “காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின் வீட்டிற் புகுதல் மிக எளிதே. வீட்டில் புக மிகவும் அரிய காரியத்தைச் செய்கின்ற யோகி களைப் பார்த்து, வீட்டில் புக மிகவும் எளிதாகிய இக் காரி யத்தைச் செய்யுங்கள் என்று கருணையினால் உபதேசம் செய் கிறார் அருணை முனிவர். அவன் மிக எளியவன், சிறந்த கருணை வள்ளல் என்பதற்கு ஆதாரம் காட்டுகிறார். குறத்தி பிரான் காட்டில் குறத்தி பிரான். காட்டிலே வாழ்ந்திருந்த குறத்தியாகிய வள்ளி தான் வளர்ந்த குறக் குலத்திற்கு ஏற்ற வகையில் முருகனை உள்ளத்தில் வைத்துப் பக்தி பண்ணினாள். அவள் இந்திரிய நிக்கிரகம் செய்ய வில்லை; தவம் செய்யவில்லை. குலத்திற்கு ஏற்ற முறையில் 79