பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 முருகனை நினைந்து மனத்திற்குள் அன்பை வளர்க்கும் காரியத்தைத் தான் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு யோகம் தெரியாது. ஞானம் தெரியாது. தவ முறைகளைத் தெரிந்து கொண்டிருக்கிற குலத்தில் அவள் வளரவில்லை. வேட்டுவ குலத்தைச் சார்ந்து, புன்செய்த் தானியமாகிய தினை முதலியவற்றைக் காப்பாற்று வதற்காகக் குற மாதர்களுடன் சேர்ந்து கிளி ஒட்டிக் கொண் டிருந்தாள். ஆனால் ஒன்று மாத்திரம் அவளுக்குத் தெரியும். தன் குலத்திற்குத் தனித் தெய்வமாக இருப்பவன் முருகன் என்பதை நன்றாக உணர்ந்தும் நம்பியும் இருந்தாள். முருகனை எவ்வாறு வழிபடுவது என்னும் முறை அவளுக்குத் தெரியாது. குழந்தை தன் தாயை நினைந்திருப்பது போல எல்லாக் காலத்தும் முருகனை நினைந்திருக்க அவளுக்குத் தெரியும். கருத்தை முருகனிடத்தில் வைத்தபடி, காட்டில் குறத்தியாகத் தினைக் கொல்லையைக் காவல் செய்து வந்தாள். ஆலோலம் பாடிக் குருவிகளையும், கிளிகளையும் ஒட்டினாள். ஆண்டவன் திருவருளுக்குப் பாத்திர மாவதற்கு என்ன என்ன பயிற்சி வேண்டுமென்று நாம் சொல் கிறோமோ அவற்றில் ஒன்றுகூட இல்லை. உணவில் வரையறை, நீராடுவதில் வரையறை முதலிய வரையறைகள் அவளுக்குத் தெரியா. அவளிடத்தில் இருந்த ஒரே ஒரு சிறப்பு, தன்னுடைய உள்ளத்தை முருகனுக்குரிய சிங்காதனமாக வைத்திருந்தது ஒன்று தான். அந்த ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு முருகப் பெருமான் கருணை மிக்கு அவளைத் தேடிக் கொண்டு ஓடி வந்தான். அவளை மனைவியாக்கிக் கொள்ள வேண்டுமென்பது தலைக் கீடே யொழிய, தன்னை மனத்தில் நினைக்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய நிலையைப் பாராமல் தானே வலிய வந்து ஆட்கொள்வான் முருகன் என்பதைக் காட்டுவதற்காகவே அந்தத் திருவிளையாடல் நிகழ்ந்தது. இறைவன் செய்கிற திருவிளையாடல் அந்த அந்தக் காலத்தில் செய்ய வேண்டியதைச் செய்வதோடு நிற்பது என்று நினைக்கக் கூடாது. ஒவ்வொரு திரு விளையாடலுக்கும் உட்கருத்து உண்டு. எல்லாக் காலத்திற்கும் பயன்படுகிற உண்மைகளை அந்தத் திருவிளையாடல்களால் உணர்ந்துகொள்ளலாம். தேவசேனை ஆண்டவன் பக்கத்தில் தேவலோகத்தில் உட்கார்ந்திருக்கவும் அவன் பூலோகத்திற்கு வள்ளி நாயகியைத் தேடி ஓடி வந்தான். அவன் எல்லா 8C,