பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 உடம்பைப் பலவகையிலும் துன்புறுத்திச் சுவாச பந்தனம் செய்து யோகம் கைகூடாமல் திண்டாடுகிற யோகிகளே, நீங்கள் இரங்கு வத்ற்கு உரியவர்கள் என்று அருணகிரியார் இரங்கிப் பேசுகின்றார். காட்டில் குறத்தி பிரான்பதத் தேகருத் தைப்புகட்டின் வீட்டில் புகுதல் மிகஎளி தேவிழி நாசிவைத்து மூட்டிக் கபாலமூ லாதார நேர்அண்ட மூச்சையுள்ளே ஒட்டிப் பிடித்துஎங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே. யோகிகள் ஞானத்தை அடைய வேண்டியவர்கள். அவர் களைப் பார்த்து இந்தப் பாட்டைச் சொல்கிற அருணகிரியார், 'ஆண்டவன் ஞானபண்டிதசாமி, அவன் ஞானமே உருவாகிய வேலாயுதத்தை வைத்திருக்கிறான். அவனுடைய பாதத்தை அடையுங்கள் என்று சொல்லியிருக்கலாம்; அல்லது, 'சித்தர் களுக்கெல்லாம் தலைவனாக இருக்கிறவன் ஆண்டவன். அவன் திருவடியைப் பற்றிக் கொள்ளுங்கள்' என்று சொல்லியிருக்க லாம். அப்படிச் சொல்லாமல், காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின் என்று சொல்கிறார். இது அவ்வளவு பொருத்தமாக இல்லையே! என்று நினைக்கத் தோன்றும். ஒருவன் சிவபூசை, பஞ்சாட்சர ஜபம் செய்கின்றவன். அவன் மாமாவின் பெண் கான்வெண்ட் பள்ளியில் படிக்கிறாள். அங்கே பைபிள் சொல்லித் தருகிறார்கள். அவள் நாள்தோறும் பள்ளிக்குப் போகும்போது பாழ் நெற்றியாகப் போவாளே தவிரக் குங்குமம் இட்டுக்கொண்டு போகமாட்டாள். அங்குள்ளவர்கள் பரிகாசம் செய்வார்கள் என்று அவளுக்குப் பயம். அவளுடைய உறவின னாகிய மேலே சொன்னவன் சிவபக்தன். 'நெற்றிக்கு இட்டுக் கொண்டு பள்ளிக்குப் போ' என்று அவளிடம் அவன் சொல்வ தனால் என்ன பயன்? அந்தப் பள்ளியில் அவள் படிக்கிறவரைக்கும் அங்குள்ள சூழ்நிலைதான் அவளை அடிமைப்படுத்தும். ஆகவே அவன், 'உனக்கு அந்தப் பள்ளி வேண்டாம். கற்பகாம்பாள் பள்ளிக்குப் போ' என்று சொல்வான். இந்தப் பள்ளிக்குப் போக ஆரம்பித்தால் இத்தகைய பழக்கம் தானே வருகிறது. அதனால் அந்த இடத்திற்கு நீ போக வேண்டாமென்று சொல்வதுதான் இயற்கையானது. அதுபோல் யோகிகளைப் பார்த்து, "யோக 82