பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முருகன் பெருமை முருகா எனஉனை ஓதும் தவத்தினர் மூதுலகில் 'ருகாத செல்வம் அடைவர் வியாதி யடைத்துதையார் உருகால மும்துன்பம் எய்தார் பரகதி யுற்றிடுவர் பொருகாலன் நாடு புகார் சமராபுரிப் புண்ணியனே. மெய்யன்பர்களே! முருகப் பெருமானுக்குரிய பெரிய விழாவாகிய இச் சஷ்டி விழாவில் இன்று எனக்குப் பேசும் பொருளாக இருப்பது முருகன் பெருமையாகும். முருகன் என்று சொல்லும் போதும் நினைக்கும்போதும் எனக்கே ஓர் ஆனந் தம் பிறக்கின்றது. அவன் திருப்பெயரை ஓதினால் நினைத் தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை நமது திருப் போரூர் சிதம்பர சாமிகள் பாடிய, நான் முதற்கண் கடவுள் வணக்கமாக, முருக என உடனை ஓதும் தவத் தினர், என்று பாடிய பாடலால் தெரியலாம். அத்தகைய சிறப்பு அவன் திருப்பெயருக்கு இருக்குமானால், அவனுக் குப் பெருமையும் மிகுதியாக இருக்கும் என்பது பெறப்படு கின்ற தன்றோ? ஆனால் அவனது பெருமை எத்தா பது எனக் காளமேகப் புலவரை வினவினால் அவர்,