பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

முருகப் பெருமானது ஈடும் எடுப்பும் அற்ற பெருமை யினைத் திருப்போரூர் சிதம்பர சுவாமியின், அஞ்சக் கரப்பரத் தொட்டிலில் சதுர்வேத

மான வடமொழி நாலையும் ஆதியுடன் இச்சை ஞானம் கிரியை நாமமு ற்

றருள் வளர்ந்தொளிர் சத்திகள் தஞ்சக் கரங்கொடு பிடித்தாங் கசைத்திடத்

தகுபரையும் ஆதி சிவனும் தாமுள மகிழ்ந்துறச் சோமனென நிலவுபொழி

தவள யானைக் கடவுளும் விஞ்சக்கரம் புனையும் முதல்வர் பதிைெருவரும்

விபுதர்களும் அரிபிரமரும் வேணி முனிவரும் அருண்ஞானமுனிவர ராதி

வியனுலகரும் பரவவே செஞ்சக்கரப் பரிதி என நிலவு போருர

செங்கீரை யர்டியருளே திமிர மலமகல வருகுமர சரவணமுருக

செங்கீரை யாடிஅருளே

என்று போற்றிப் புகழ்வாராயினர்.

முருகனது பெருமையினைத் திருமாலும், நன்கு உணர்ந்தவர். இதனை அவர் கூற்றுக்களாகிய

ஒதியாகியும் உணர்ந்தவர்க் குனரவும் ஒண்ணு நீதியாகியும் நிமலமதாகியே நிகழும் சோதியாகியும் தொழுதிடும் எம்மஞேர்க் கெல்லாம் ஆதியாகியும் நின்றவன் அறுமுகன் அன்ருே ஈறியாதமாபரனே குழவியின் இயல்பாய் ஆறுமாமுகம் கொண்டுதித்தான் என்பதல்லால் வேறுசெப்புதற்கு இயையுமோ மேலவன் தன்மை தேறியும் தெளிகின்றிலை உமது சிந்தையுமே என்பனவற்ருல் அறியலாம்.