பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

அறிவு சிறிது; ஆகவே, அறியாமல் இங்ங்னம் அறிவித் தனன்' என்பர்.

அடுத்தாற்போல் சிங்கமுகனைக் காண்பாம். சிங்க முகன் சூரபதுமனது நேர் இளையவன். போர் என்ன வீங்கும் பொலங்கொள் தோளினன். புறமுதுகு காட்டி ஒடா அத்துணை வீரன். அத்தகையனும் முருகன் பெருமையினை உணர்ந்து, தன் அண்ணளுகிய சூரபதுமனுக்குச் சாற்றியவை இன்ன என அறிந்தால், முருகன் பெருமையினை நன்கு அறியலாம் அன்ருே? இனிச் சிங்கமுகனது செம்மை சான்ற மொழிகளைக் காண்பாம்.

மானுடத் தவரில் விலங்கினில் புட்களில் மற்றும் ஊனமுற் றுழல்யாக் கையில் பிறந்துளார் ஒப்ப நீநினைக் கலைபரஞ்சுடர் நெற்றியம் தலத்தே தானு தித்தனன் மறைகளும் கடந்ததோர் தலைவன் சில மில்லவர்க் குணரஒண்ணுத சிற்பர்னைப் பாலன் என்றனை அவனிடத் தில்பல பொருளும் மேலைநாள் வந்து தோன்றிய சிறியதோர் வித்தின் ஆலம் யாவையும் ஒடுங்கியே அவதரித் ததுபோல் அருவமும் ஆகுவன் உருவமும் ஆகுவன்அரு உருவும் இல்லதோர் தன்மையும் ஆகுவன் ஊழின் கருமமும் ஆகுவன் நிமித்தமும் ஆகுவன் கண்டாய் பரமன் ஆடலை யாவரே பகர்ந்திடற் பாலார் வேதக் காட்சிக்கும் உபநிடதத் துச்சியில் விரித்த போதக் காட்சிக்கும் காணலன் புதியரில் புதியன் மூதக் கார்க்கும் முதக்கவன் முடிவிற்கும் முடிவாய் ஆதிக்கும் ஆதியாய் உயிர்க்குயிராய் நின்ற அமலன் ஞாலம் உள்ளதோர் பரம்பொருள் நாம் எனப் புகலும் மாலும் வேதனும் மாயையாம் வரம்பினுள் பட்டார் மூல மாகிய தத்துவம் முழுவதும், கடந்து மேலும் உயர்ந்திடும் தனிமுதல்வன் ஆவன்