பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

வில் முருகன் பெருமை என்னும் பொருள் பற்றிப் பேசி

முடித்துக் கொண்டு,

அஞ்சு முகம்தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரம் தோன்றில் வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என் ருேதுவார் முன்.

என்ற பாடலைப் பாடியும்,

'விழிக் குத் துணைதிரு மென்மலர்ப்பாதங்கள் மெய்மை,

குனரு மொழிக்குத் துணைமுரு காஎனும் நாமங்கள் முன்புசெய்த "பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி ‘வழிக்குத் துணைவடி வேலும்செங் கோடன் மயூரமும்

என்ற அருணகிரியாரது அமுத மொழிகளையும் பாடி முரு கனது பங்கயப் பாதங்களைப் பரவிப் போற்றுகின்றேன்.