பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலின் சிறப்பு

வீரவேல் தாரைவேல் விண்ளுேர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

மெய்யன்பர்களே !

வணக்கம்; இரண்டாவது நாளாகிய இன்று நமக்குப் பொருளாக அமைந்தது 'வேலின் சிறப்பு என்பது. வேல் இன்னது என்பதை உங்கட்கு யான் கூற வேண்டுவது இல்லை. இது முருகப் பெருமான் கொண்டுள்ள படைகளில் ஒன்ருகும் என்பது உங்கட்கு நன்கு தெரியும்.

தெய்வங்கள் தம் திருக்கரங்களில் படைகளைக் கொண் டுள்ள மைக்குக் காரணம் அப்படைகளைக் கொண்டு அன்பர் களின் பகைவர்களை அழித்து அன்னர் தமக்கு அருள் தரு தற்கே ஆகும். இதனைத் திருமூலர் தம் திருமந்திரத்தில்

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன் வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம் வருத்தம்செய் தான்என்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் ருனே என்று அறிவித்துள்ளார். இம் முறைக்கு இணங்கவே முருகப் பெருமானும் தன் திருக்கரத்தில் இவ்வேல் படை யினைத்தாங்கி, தன் அடியவர்களின் பகைவர்களே அதனுல்