பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

அழித்து, அவர்கட்கு இன்னருள் பாலித்துக் கொண் டுள்ளான்.

முருகப் பெருமான் பல படைகளைக் கொண்டிருந் தாலும் வேற் படைக்குள்ள பெருமதிப்பு ஏ&னய படை களுக்கு இல்லை என அறுதியிட்டு உறுதியாகக் கூறி விடலாம். இது குறித்தே ஈண்டு வேலின் சிறப்பு என்ற த8லப்பில் பேசுதற்குக் காரணமாயிற்று. வேலின் மாண் பைப் பல்லாற்ருலும் உணரலாம். இனி அதன் மாண்பினைச் சிறிது காண்போமாக.

வேல் என்னும் இச்சொல் முதல்நிலை திரிந்த தொழிற் பெயராகும். அதாவது வெல் என்னும் வினைப்பகுதி (முதல் நிலை) வேல் எனத் திரிந்து பெயர்ச் சொல்லாக அமைந் துள்ளது என்பதாம். இதல்ை இப்படை ஒன்றே வெல்லும் தன்மையினைப் பெற்றுள்ளது என்பது புலனுகின்ற தன்ருே? ஏனைய படைகளும் வெல்லுதற்குப் ப்யன் பட் டாலும், சொல்லும் பொருளும் இயைந்த நிலையில்அப்படை களின் பெயர் அமையா திருத்தலே நன்கு ஒர்தல் வேண்டும்.

வெல்லும் சிறப்பு இதன்பால் இருத்தலினல்தான், மக் களும் தங்கள் பெயரைத் தங்கவேல் என்றும், கதிர்வேல் என்றும், வேலாயுதம் என்றும், வேல் என்றும், மாணிக்க வேல் என்றும் அமைத்துக் கொண்டு, இப்படையின் பெரு மையினைப் பார் அறியச் செய்து வருகின்றனர். இப் பெருமை வேறு எந்தப் படைக்கும் இல்லே என்று ஒரு தலே யாக உணர்த்தி விடலாம். ஆல்ை, ஈண்டு ஓர் ஆசங்கை ஒரு சிலர் உள்ளத்தில் எழக் கூடும்.அதாவது பினகபாணி, சக்கர்பாணி, கோதண்டபாணி, சாரங்கபாணி, (பிருகம், கோதண்டம், சாரங்கம் என்பன வில் என்ற பொருளைத் தருவன) என்னும் பெயர்கள் இல்லையோ, அவைகள்