பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலின் சிறப்பு

யாவும் ஆயுதத்தின் அடியாக அமைந்த பெயர்கள் அல் லவோ என்று வினவலாம். அப்பெயர்கள் ஆயுதங்களே மட்டும் சுட்டிக் காட்டும் நிலையில் இன்றிப் பாணி என்ற சொல்லுடன் சேர்ந்து வழங்கப்படுதலின், அவ்வளவு தனிச் சிறப்பு அப் படைகட்கு ஏற்பட இடன் இல்லை என் பதை நன்கு அறிதல் வேண்டும். பாணி என்ற சொல்லு டன் கூடிய வழியே அவைகள் மக்கள் பெயராகும் மாண் பினைப் பெறுகின்றன. ஆனால், வேல் என்னும் ஆயுதம் அங் ங்னம் இன்றி, ஆயுதப் பொருளைச் சுட்டும் சொல்லாகவே நின்று மக்கள் பெயராக அமைந்து அப்பெயரைத் தாங்கி யவர்களை மாண்புறச் செய்து வருகின்றது. இவ்வாறு கூறு வதில் எவர்க்கேனும் ஐயம் வர இடன் உண்டா? இல்லை அன்ருே?

எந்த விதமான அடைமொழிகளும் அமைத்துக் கூருத நிலையினும், வேலுக்குத் தனிப் பெருமையுண்டு. மாணிக்க வேல் பிள்ளை என்ருே, தங்கவேல் பிள்ளை என்ருே, கதிர் வேல் பிள்ளை என்ருே கூறப்படுவதோடின்றி வேலுப் பிள்ளை என்று கூறும் நிலையிலும், மக்கட் பெயராகும் வாய்ப்பு இப் படைக்கு உண்டு. அடை மொழிகளுடன் கூற விரும்புவது அவரவர் வேட்கையினைப் பொருத்ததாகும். அடை மொழி கொடுத்து வேலை அலங்கரிக்காமையே அதன் மாண்புக்கு ஒர் அறிகுறியாகும். இதனை அருண கிரியாரது அமுதவாக்கைக் கொண்டும் நிலைநாட்டலாம். கந்தரனு பூதியில்

ஆடும் பரிவேல் அணிசே வலெனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனியா னைச்சகோதரனே என்று பாடப்பட்டுள்ள பாடலில், முருகப் பெரு மானது ஊர்தியாகிய பரிக்கு ஆடும்’ என்னும்

மு 2.