பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f8 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

அடையினைத்தந்தும், கொடியாகிய சேவலுக்கு அணி என் னும் சிறப்புச் சொல்லும் தந்து பாடிய அருணகிரியார் வேல் என்னும் ஈடும் எடுப்பும் அற்ற படைக்கு எந்த வித மான அடைச் சிறப்பும் தந்து அறிவிக்காததை நன்கு உன்னுதல் வேண்டும். அருணகிரியார் நன்கு சிந்தித்தே வேல் என்னும் வெற்றிதரும் படைக்கு எந்த விதமான அடை மொழிகளையும் அமைத்திலர். அதனையும் பரிக்கும் சேவற்கும் அடை கொடுத்து அறைந்தது போல அறிவித் திருப்பாராயின், அவ்விரண்டு பொருள்களே டு இப் பொரு ளாகிய படையும் ஒரு பொருளாகும்; அவற்ருேடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் நிலையில் நின்று விடும். ஆனல் வேல் தன்னேரில்லாத் தனிச் சிறப்புப் பெற்றுள்ளமையின் அதனைத் தனித்துப் பிரித்துக் காட்ட வேண்டி அடை மொழி கொடுத்து அறிவியாது சென்றனர் அறிஞர் பெரு மாளுகிய அருணகிரியார்.

அடை மொழி கொடுப்பதுதானே சிறப்பு? அடை மொழியினல் அன்ருே பொருளின் சிறப்புப் பொலிவ தாகும் என ஒரு சிலர் கருதக் கூடும். சிற்சில பொருள் களுக்கு அடை கொடுத்துத் தான் சிறப்பிக்க வேண்டி யுள்ளது. ஆனல், ஒரு சில பொருள்களுக்கு அடை மொழி கொடாமல் இருப்பதே அவற்றின் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாகும். இதனை மணிவாசகப் பெருமானர் பாடிய திருக் கோவையாரில் ஒரு பாடலேப் படித்தும், அதற்கு விளக்க உரை கண்ட பேராசிரியரது பேருரையைக் கொண்டும் நன்கு தெளிந்து கொள்ளலாம்.

திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர் தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்

கொண்டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந் துருவளர் காமன்தன்வென்றிக் கொடிபோன்ருெளிர்கின்றதே என்பது அத் திருக்கோவையார் பாடல்.