பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலின் சிறப்பு 19

இப் பாடலில் தாமரை என்னும் சொல் முகத்தையும், காவிகள் என்னும் கூற்று கண்களையும், குமிழ் என்னும் கிளவி முக்கினையும்,கோங்கு என்னும்மொழி முலையினையும், காந்தள் என்னும் பதம் கையினையும் சுட்டிக் காட்டும் சொற்களாம்.

இங்கே காட்டப்பட்ட உறுப்புக்களைச் சுட்ட கருவியாக நின்ற சொற்களாகிய தாமரை என்னும் சொல் திருவளர் என்ற அடையினைக் கொண்டும், காவிகள் என்னும் கூற்றுச் சீர்வளர் என்னும் அடையினைக் கொண்டும், குமிழ் என்னும்மொழி பூங்குமிழ் என்னும் அடையுடனும், காந்தள் என்னும் கிளவி பைங்காந்தள் என்ற சிறப்புடனும் பேசப் பட்டிருந்தும், அமிர்த கலசமாகிய கொங்கையினை உணர்த்தி நிற்கும் பதமாம் கோங்கு என்பது எந்த வித மான அடைமொழியும் தந்து, உரைக்கப் படாமல் இருத் தலை ஈண்டு நன்கு சிந்தித்தல்வேண்டும். இங்ங்னம் அடை கொடுத்துப் பேசப்படாமைக்குரிய காரணம் இன்னது என் பதைப் பேராசியர், மகளிர்க் குறுப்பில் சிறந்த உறுப் பாகிய முலைக்கு உவமையாகப் புணர்க்கப்பட்ட கோங் கிற்கு அடை கொடுக்கக் கடவதன்ருே எனின், அடை கொடுப்பின், பிற உறுப்புக்களுடன் இதனையும் ஒப்பித்த தாம். ஆகலான், இதற்கு அடை கொடாமையே முலைக்கு ஏற்றத்தை விளக்கி நின்றது. அஃது முற்கூறிய வகை யில் திருக்கோயில், திருவாயில், திருவலகு என்றவற்றிற்கு நாயகராகிய நாயனரைத் திருந்ாயனர் என்னதது போல எனக்கொள்க' என்று விளக்கிப் போந்தார். இவ்விளக் கத்தைக் கண்ட நாம் வேலுக்கும் அடை வேண்டாமையே அதன் பெருமைக்கு ஏற்ற சான்ருகும் என்று அறிகிருேம் அல்லமோ?