பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

இத்தகைய பெருமைசான்ற வேல் முருகனுக்கே உரித்தாகிய படையாகும். இன்னின்ன தெய்வங்க்ட்கு உரியபடை இது இது என்று நிகண்டு எடுத்துக் காட்டு கிறது.

"கொன்றையார்க்குப் பரசொடுகடிய சூலம் பிளுகவில் (படைகள்” “மாலுக்குச் சில ஆழி சங்குவாள் கதை படையைத் தாகும்' 'அறுமுகன் உறுபடைவேல்' என்பன அந்நிகண்டு அடிகள்.

வேல், எஃகம், ஞாங்கர், உடம்பிடி, சத்தி என்பன வேலைக்குறிக்கும் சொற்கள். இவற்றுள் வேலுக்குச் சத்தி என்னும் பெயருண்மையினை நன்கு சிந்தித்தல் வேண்டும். படைகளுக் கெல்லாம் இப்படை அரசாக இருத்தலின் இது சத்தி என்றும், படை அரசு என்றும் கூறப்படும் பெருமை சான்றது. இப்படை, எப்படைக்கும் நாயகமாதலைக் கந்த

புராணம்,

ஆயதற்பின்னர் ஏவின் மூதண்டத்தையும், பெரும்

பூதமும் அடுவது ஏய பல்லுயிரும் ஒருதலை முடிப்பதேவர் மேல் விடுக்கினும் அவர்தம் மாயிரும் திறனும் வரங்களும் சிந்தி மன்னுயிர்

உண்பதெப்படைக்கும் நாயக மாவதொருதனிச் சுடர்வேல் நல்கியே மதலை

கைகொடுத்தான்

என்றும்,

தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்குஞாலத்து ஆயிரம் கோடி அண்டத்து அங்கியும் ஒன்றிற்று அன்ன மீயுயர்ந்து ஒழுகி ஆன்ருர் வெருவரும் தோற்றம்கொண்டு நாயகன் தனது தெய்வப்படைக்கலம் நடத்த தன்றே என்றும் இயம்புகின்றது.