பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலின் மாண்பு

கார்மா மிசைகா லன்வரின் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரியெனும் சூர்மா மடியத் தொடுவே லவனே

மெய்யன்பர்களே !

மூன்ரும் நாள் சொற்பொழிவாகிய இன்றைத் தினம் நமக்குப் பொருளாக முன்னிற்பது மயிலின் மாண்பு என்ப தாகும். மெய்யன் பர்கட்குப் பெருந்துணையாக இருப்பவை வேலும் மயிலும் ஆதலின், வேலின் சிறப்பைப் பற்றிப் பேசிய பிறகு, மயிலின் மாண்பைப்பற்றி அடுத்தாற்போல் பேசும் கடப்பாடு பொருத்தமானதேயாகும். மேலும், அன் பர்களை இவ்விரண்டும் ஆபத்துக் காலத்தில் காப்பவை என்பதற்காகவே, வேலும் மயிலும் துணை என்ற தொடரும் நாட்டில் வழங்கப்பட்டு அன்பர்கள் வாயிலும் எப்போதும் கூறப்பட்டு வருகின்றது.

வேல் முருகப்பெருமானுக்குப் படையாக இருந்து பயன்பட்டு வருவதுபோல, மயில் அவனுக்கு ஊர்தியாக இருந்து உதவி புரிந்து வருகிறது. வேல் முருகனுக்கு ஆயுதமாக இருப்பதல்ை எங்ங்னம் சீரும் சிறப்பும் உற்றுத் திகழ்கிறதோ அது போலவே, மயிலும் சண்முகப்