பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலின் மாண்பு 39

அன்னனுக்கு வாகனமாக அமைதற்குமுன்பே மயில்வாகன மாயிற்று என்பது புலனத8லக் காண்க. இந்தக் கார ணம் கொண்டே கச்சியப்ப சிவாசாரியர், போர்க்களத்தில் சூரன் முன்பு காட்சி அளித்த முருகப் பெருமானைக் குறிப் பிடும்போது, 'கோலமா மஞ்சைமீது குலவிய குமரன்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மயிலே அவனுக்குக் கொடியாக உள்ளது என்பதை சங்க் நூல், மணிநிற மஞ்சை ஓங்கிய புட்கொடி' என்கிறது. வாகனமாக வாய்ந் திருப்பதைப் பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ என்றும் சங்க நூல் தெரிவிக்கும். (பிணி முகம்-மயில்) கந்தப் பெருமான் வாகனங்கள் இன்னின்ன என்பதை யும் அவை எங்ங்னம் அவனுக்கு அமைய நேர்ந்தன என்பதையும் கண்டோம். இனி மயில் வாகனத்திற்கிருக் கும் தனிச் சிறப்பைக் கரு துவாம். மயில் மக்களால் வணங்குதற்குரிய பொருள் என்பது அருணகிரியார் கருத்து. அவர் தம் திருவாக்கில்,

பரவி உனதுபொற் கரமும்முத்

தணியும் உரமும் மெய்ப்பிரபையும் மருமலர்ப் பதமும் விரவுகுக் குடமும் மயிலும் உருபரிவாலே

என்றருளிப் போந்தார். இவ்வாறு மயில் வணங்குதற் குரிய பொருளாக அமைதற்குக் காரணம் உண்டு. மயில் பிரணவ வடிவமாக இருப்பது. இதன அருணகிரியார் 'அவளை அ&ணதர இனிதின் ஓங்கா பரியின் மிசை வரு வாயே?’ என்று வேண்டும் வேண்டுகோளால் விளங்கிக் கொள்ளலாம். இறைவனைத் தலைவனுகவும், உயிர்களைத் தலைவியாகவும் கொண்டு பாடுகின்ற மரபு திருக்கோவை யார், திருவாய் மொழி போன்ற நூல்களில் பரக்கக் காண் கின்ருேம். ஆதலின், ஈண்டு அவளே என்பது முருகளும் இறைவனைக் கட்டி அணைத்து இன்புற விழையும் சீவனும்