பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭ0 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

த8லவியே ஆவாள். பரி என்றது ஈண்டுக்கு திரை என்னும் பொருளில் இன்றி, ஊர்தி என்ற பொருளில் நின்று மயி லாகிய ஊர்தியை உணர்த்தி நிற்கிறது. இப்பொருட்டா த8ல 'ஆடும்பரி' என்னும் கந்தர் அனுபூதிப் பாடலாலும் அறியலாம். பிரணவமாம் பெருமந்திரத்தின் முதல் எழுத்து ஓ காரமாதலின் 'ஒகாரம் பரி” என்று ஈண்டுக் குறித் தருளினர்.

முருகப்பெருமான் ஊர் தியாம் மாமயில் ஓங்காரமாம் பிரணவ நிலையில் மட்டும் இயங்காது, மகாமந்திரவடிவ மாகவும் இயங்கவல்லது என்பது ஆன்ருேர்களது முற்ற முடிந்த முடிபாகும். இதனையும் வாக்கிற்கு அருணகிரி யார் என்று வழுத்துதற் குரிய அப்பெரியார், ஆதியொடும் அந்தம் ஆகிய நலங்கள்

ஆறுமுகம் என்று தெளியேனே ஆனதனி மந்த்ர ருபநிலை கொண்ட

தாடுமயில் என்பதறியேனே என்று பாடியுள்ளார்.

ஈண்டு அருணகிரியார் தாம் ஆடுமயில் மந்திர ரூபம் ஆனது என்பதை அறியாமல் இருந்ததாகப் பாடிக் காட்டுவது, தமது அறியாமையினை உணர்த்துதற்கு அன்று. உலகமக்கள் இந்த உண்மையினை உணராமல் இருக்கின்றனரே என்று அவர்கள்பால் இரக்கம் கொண்டு அவர்கள் சார்பில் அவர்கள் தம் குற்றத்தைத் தம்மாட்டு ஏற்றிக்கொண்டு இவ்வாறு மொழிந்ததாகும். இது குழந்தைகட்கு நோய் வந்துற்ற போது தாய்மார் மருந் துண்டு பத்திய முறைகளைக் கையாளுவது போன்றதாம்.

இங்ங்னம் அருமைக்கும் பெருமைக்கும் உரிய மயிலின் குரலாலும் மக்களுக்குப் பயனுண்டு; அக்குரல் தணந்திருப்