பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

தேவி மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினன். பல கால் உச்சரிக்கத் தொடங்கினன். முருகப் பெருமான் தேவி யாரைச் சிறிதும் அப்புறம் இப்புறம் செல்ல ஒண்ணு நிலை யில் அவள் தன் மீதமர்ந்து கொஞ்சிக் கொண்டிருந்தான். இக்கொஞ்சு மொழியில் ஈடுபட்டிருந்த தேவி சம்பந்தாண் டான் முன் வந்து காட்சி அளிக்கும் வாய்ப்பினைத் தாராது ஒழிந்தார். ஆகவே, சம்பந்தாண்டான் தோல்வியுற்றனன். உடனே அருணகிரியார் முகப்பெருமானை தம்முன் வரு மாறு

சந்தித் தரஹர சிவசிவ சரணென

கும்பிட் டினையடி அவைஎன தலைமிசை தங்கப் புளகிதம் எழஇரு விழிபுனல் குதிபாயச் சம்பைக் கொடியிடை விபுதையின் அழகுமுன்

அந்தசத் திருநடம் இடுசரண் அழகுற சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயோ என்று பாடினர். ஆனல் சம்பந்தாண்டான் தேவியை மந் திர ரூபம் வழிபட்டு முருகனைச் சபைமுன் வராதவாறு செய்து தடுக்க முயன்றன். இதனை உள்ளுணர்வால் உணர்ந்த அருணகிரியார், மயிலே இணைத்து முருகனை வருமாறு வேண்டத் தொடங்கினர். அங்ங்னம் வேண்டி நின்ற திருப்பாடல்,

உதயதாம மார்பரான ப்ரபுடதேவ மாராஜன்

உளமும் ஆட வாழ்தேவர்-பெருமாளே அதலசேட குர்ஆட அகில மேரு மீதாட

அபின காளி தாளுட-அவளோடன்று அதிரவீசி வாதாடும் விடையில் ஏறு வாராட அருகுபூத வேதாளம்-அவிையாட மதுர வாணி தானுட மலரின் வேதஞர்ஆட மருவு வானுளோர் ஆட-மதியாட வனச மாமியார் ஆட நெடிய மாமளுர்ஆட மயிலும் ஆடி நீயாடி-வரவேணும்