பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலின் மாண்பு 83

இவ்வாறு பாடிவேண்டியதும் உடனே முருகப் பெரு

மான் மயில்மீது இவர்ந்து மன்னன் சபையில் தோன்றிக் காட்சி அளித்தனன். இதனே, அருணகிரியார் சமயம் வாய்க்கும் போதெல்லாம் தம் திருப்புகழில் குறிப்பிட்டே சென்றுள்ளார்.

உலகினில் அனையவர்கள் புகழ்வுற அருணையில்

ஒருநொடிதனில் வரும்-மயில்வீரா என்றும்,

சயிலம் எறிந்தகை வேல் கொடு

மயிலினில் வந்தெனை ஆட்கொளல்

சகம் அறியும்படி காட்டிய-குருநாதா! என்றும் பாடிப்பரவசமுற்றுள்ளார்.

மேலே காட்டிய நிகழ்ச்சி உண்மையானது என்பது அனேயவர்கள் புகழ்வுற அருணையில் வரும் மயில் வீரா என்றும், மயிலினில் வந்தெனை ஆட்கொளல் சகம் அறியும் படி காட்டிய குருநாதா என்றும் பிரபுட தேவ மாராஜன் உளமும் ஆட வாழ்தேவர் பெருமாளே என்றும் திகழும் அடிகளால் தெளிவாதலைக் காணவும். ஆகவே பகையைத் தடுப்பதற்கு மயில் பெருந்துணையாகிறதல்லவா? இதல்ை அன்ருே உலகில் வேலும் மயிலும் துணை, என்ற தொடர் நிலவி வருகிறது. இது குறித்தன்ருே சிதம்பர சுவாமி களும் மயிலும் அயிலும் கொண்டு வன்பகை தணிக்கலால் என்றருளிச் செய்தனர்.

இயமபயத்தினின்றும் மீளுதற்கும் இம்மயில் அருந் துணையாக இருக்கவல்லது. இயமனது வாகனம் இன்னது என்பது உங்கட்குத் தெரியும். அது, எருமைக்கடா. அவ னது தோற்றத்தைப் பற்றியும் கூறவேண்டுவதில்லை. அவனது தோற்றம் பயங்கரமான தோற்றம். இந்தத்

மு. 3.