பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

தேர்ற்றத்தோடும் வாகனத்தோடும் வந்தால் யார்தாம் அஞ்சுருர்? எவரும் அஞ்சுவர். இந்த நேரத்தில் அஞ்சாத நிலையின்ை அளிக்கவல்லது மயூரமே ஆகும். இந்த உண்மை தெரிந்தே அருணகிரியார்,

கார்மா மிசைகா லன்வரின் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார் பவலா ரிதலா ரியெனும் சூர்மா மடியத் தொடுவே லவனே

என்று வேலனை வேண்டி நின்ருர். (கலபத்தேர்-மயில்.)

அருணகிரியார்தாம் இந்த உண்மை அறிந்து உரைத் தார் என்பது இல்லை. திருப்போரூர் சிதம்பர சுவாமிகளும் இந்நிலையினை நன்கு அறிந்து அவரும் தம் அனுபவ மொழியில்,

கால்ன் செங்கட் கடாவினில் ஏறியே

கயிறு வீசிப் பிடியாமுனம் என வேலும் செங்கையில் ஏந்தி மயில்மிசை

விரைவினில் வந்து உவந்து அஞ்சல் என்ருளுவாய் ஆலமுண்ட களத்தரிடத்துறை

அரிவை கொஞ்சுற கொஞ்சுபைங்கிள்ளேயே தாலம் பாளை மதுக்குடம் ஏந்திய

சமராபுரிச் சண்முக வேலனே

என்று பரவி நின்ருர்.

இவ்விருவர்தம் திருவாக்குகளினல் மயிலுக்கு அச்சம் தரும் பொருள்களையும் அடக்கிஆளும் வன்மை உண்டு என்பது தெளிவாகின்றதன்ருே? மேலும் இம்மயிலின் மாண்பு இத்தகையது என்று கூறக் கருதிய அருணகிரி

шт т,