பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

துரககஜ் ரதகடக விகடதட நிருதர்குல துஷ்டர்நிஷ் டுர மயில் என்றும், குறிப்பிட்டிருப்பது கொண்டு தெளியவும் இவ்வாறு பலசிறப்பும் பெருமையும் தரும்மயிலே நாம் பரவ வேண்டியது கடமையன்ருே? அப்படிப்பரவவே பெருங். கருணைகொண்டு அருணகிரியார் மயில் விருத்தம் பாடி அரு ளினர். அம்மயில் விருத்தம் கொண்டு மயிலைப் பரவினல் பயன்உண்டு என்று அறிவிக்கும் திருப்பாடலைப் பாடி என் னுடைய சொற்பொழிவினை முடித்துக் கொள்கின்றனன். அதன் கருத்து மயிலைப் பாடிப்பரவுவோர் கல்வி, செல்வம், வாழ்நாள் மிகுதியும் பெறுவர் என்பதாம்.

எந்நாளும் ஒருசுனையில் இந்த்ர நீ லப்போது

இலங்கிய திருத்த ணிகைவாழ் எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு

நம்பிரான் ஆன மயிலைப் பல்நாளும் அடிபரவும் அருணகிரி நாதன்

பகர்ந்த அதி மதுர சித்ரப் பாடல்தரு மாசறு விருத்தும் ஒரு பத்தும் படிப்பவர்கள் ஆதி மறைநூல் மன்நான் முகம்பெறுவர் அன்னம்ஏ றப்பெறுவர்

வாணிதழு வப்பெறுவரால் மகரால யம்பெறுவர் உவணம்ஏ றப்பெறுவர்

வாரிட மடந்தை யுடன் வாழ் அந்நாயகம்பெறுவர் அயிராவ தம்பெறுவர்

அமுதா சனம்பெறுவர்மேல் ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்

அழியா வரம்பெறுவரே.