பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

லும், நம் முன்னேர்கள் அத்தகையனே ஆலயங்களில் வைத்து வழிபடுவதை ஒரு தனிச் சிறப்பாகக் கொண் டனர். அங்ங்ணம் அவர்கள் அமைத்ததன் நோக்கமும் நல் எண்ணம் கொண்டே யாகும். இறைவல்ை கொடுக்கப் பெற்ற உடல் உறுப்புக்கள் அவனுக்குப் பயன்படுவதற்கே ஆகும். திருவள்ளுவர்,

கேர்ளிற்பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத்தலை என்று கடவுள் வாழ்த்து என்னும் தலைப்பின் கீழ்ப் பாடியருளினர்.

இதன்கண் வந்துள்ள வணங்காத்தலே என்பதற்கு அரியவிளக்கம் காட்ட வந்த பரிமேலழகர், காணுதகண் முதலியனபோல், வணங்காத தலைகள் பயனில எனத் தலைமேல் வைத்துக் கூறினர்; கூறிஞரேனும் இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயனில் என்பதும் கொள்க’ என்று விளக்கி அருளினர்.ஆகவே, கால்களைப் பெற்றவர்கள் கடவுளர் ஆலயங்கட்குச் சென்று வல்ம் வந்து வழிபடல்வேண்டும் என்பது அறிய வருகின்ற தன்ருே? அப்பர் பெருமாருைம் தாம் பாடியுள்ள திருவங்க மா8லயில்,

கால்கள்ால் பயன்என் கறைக்கண்டன் உறைகோயில் கோலக் கோபுரம் கோகரணம்சூழாக் கால்களால் பயன்

என்!

என்று வினவி மக்களை விழிப்புறச் செய்து ஆலய வழி பாட்டை ஆதரித்துப் பேசினர். இக்கருத்தை உட் கொண்டே,'திருப்பதி மிதியாப் ப்ாதம்சிவனடி வணங்காத்