பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முருகன் பெருமை 3

சைவசித்தாந்த சாத்திரமும் ஆணித்தரமாக அறிவித்துக் கொண்டிருக்கிறது. அருணந்தி சிவாசாரியார்,

 உருமேனி தரித்துக் 
 கொண்ட தென்றலும் 
 உருவிறந்த         
 அருமேனி அதுவும் 
 கண்டோம் அருவுரு 
 வானபோது       
 திருமேனி உபயம் 
 பெற்ருேம் செப்பிய 
 மூன்றும் நந்தம்             
 கருமேனி கழிக்க வந்த 
 கருணையின் வடிவு 
 காணே

எனச் சிவஞான சித்தியாரில் செப்பியுள்ளார்.

  இதுகாறும் எடுத்துக் காட்டிய ஏதுக்களால் இறைவன் உருவத் திருமேனி கொள்வது அன்பர்களின் பொருட்டு என்பது பெற்ரும். இம்முறையில் எடுத்த திரு மேனியே முருகன் திருமேனியாகும்.
  முருகப்பெருமான் இறைவனுக்குத் திருமகன் இளைய பிள்ளை என்று கூறப்படுவதும், கருதப்படுவதும் உபசாரமே அன்றி, உண்மை யில்லை. பின்னை முருகன் யாவன்? அவன் முழுமுதற் பரம்பொருளே ஆவான்; அவனும் இறைவனும் வேறல்லர். இருவரும் வேறு வேருயின் கந்த புராணம்,
  வத்திக்கும் மலரோன் 
  ஆதி வானவர் உரைத்தல் 
  கேளா        
  புந்திக்குள் இடர்செய் 
  யற்க புதல்வனைத் 
  தருதும்            
  அந்திக்கு நிகர்மெய் 
  அண்ணல் அருள்புரி 
  அறிஞர் ஆயோர்           
  சிந்திக்கும் தனது 
  தொல்லைத் திருமுகம் 
  ஆறும் கொண்டான்

எனக் கூறுமோ? இப்பாடலால் இறைவனே ஆறுதிருமுகம் கொண்டு திகழ்ந்தான் என்பது புலனுகின்றதன்ருே?

முருகப்பெருமான் பிறப்பைப் பற்றிப் பேசும்போதும், இறைமைப்பண்பு இலங்கவே இயம்பியுள்ளார் கச்சியப்ப சிவாசாரியார்.