பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள்

டன்றி, முழுமுதற் பரம்பொருளாம் முக்கண் மூர்த்தியின் திருத்தலமாகவும் இது விளங்குகின்றது. இதல்ை இத் தலத்தைத் திரு ஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவா மிகளும் பாடியுள்ளனர். 'திருபரங்குன்றம் மேயபரமன்' என்பர் சுந்தரர். நன்னகர்' என்று இதனை ஞானசம்பந்தர் போற்றுகிருர். சுந்தரர் தேவாரத்தில் இத்தலம் கோத் திட்டை என்று கூறப்படுகிறது.

இங்குச் சிவபெருமான் தம் திருமகன் திருமணத்தில் உமாதேவியாருடன் எழுந்தருளி முருகப்பெருமானுக்குத் திருவருள் புரிந்து தேவர்கட்குக் காட்சி தந்தருளியுள் ளார். சுந்தரர் முடியுடை மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களுடன் சென்று வழிபட்ட குறிப்பு, அவர் இத் தலத்தைப் பற்றிப்பாடிய இறுதிப்பாடலில் 'முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே' என்று பாடிய அடியால் தெரிகிறது. இத்தலத்து இறைவர் பரங்கிரி நாதர் என்றும் இறைவியார் ஆவுடை நாயகி என்றும் அழைக்கப் பெறுவர். இது முருகப்பெருமானுல் வழிபடப்பட்டதலம்; இத்தலத்தில் வெள்ளியால் ஆகிய சிவாலயம் ஒன்று இருந்ததாகவும் கூறுகின்றனர்.

திருப்பரங்குன்ற மலைக்குத் தெற்கில் உமையாண் டாள் கோயில் ஒன்று உண்டு. ஈண்டுள இறைவர் சத்திய கிரீஸ்வரர் என்றும், தேவியார் கோவர்த்தளும்பிகை என்றும் அழைக்கப் பெறுவர். ஆனல், கல்வெட்டுக்களில் இறைவர் சுந்தரபாண்டியர் என்று சுட்டப் பட்டிருக்கின் றனர். மலைமீதுள்ள சுனையின் அருகு சிவலிங்கம், நந்தி உருவங்கள் உள்ளன. இந்த இலிங்கம் விஸ்வநாதர் என்றும், தேவியார் விசாலாட்சி என்றும் அழைக்கப்படு கின்றனர்.