பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

திருப்பரங்குன்றம் சங்க நூற்களில் பல இடங்களில் குறிக்கப் பட்டுள்ளது. குன்று என்றே இது குறிக்கப் படுதலே குன்றமர்ந்து' என்னும் பரிபாடல் தொடரால் புலளுகிறது. சீர் மிகு முருகன் தண் பரங்குன்றத்து' என்று அக நானுாற்றிலும், அங்குரல் தனிமழை பொழி யும் தண்பரம் குன்று, என மதுரைக் காஞ்சியிலும், ‘மா கொன்றவென் வேலோன் குன்று எனக் கலித்தொகை யிலும், 'ஒடியாவிழவின் நெடியோன் குன்றம்’ என்றும் பாடப்பட்ட அடிகளாலும் காணலாம்.

இவ்வாறு திருப்பரங்குன்றம் பாடப்பட்ட பாடல் களில் ஒர் உண்மை ஊடுருவி உள்ளதைக் கவனித் தல் வேண்டும். அதாவது இக் குன்றம் முருகப்பெரு மானுக்கே சிறப்புமுறையில் உரிய குன்றம் என்பதாம். திருப்பரங் குன்றத்தில் மழை அடிக்கடி பொழியும் என் பதும், இடையருது விழாக்கள் நிகழப் பெறும் என்பதும் ஈண்டே அறியக் கிடக்கும் உண்மைகளாகும். பரங்குன்றத் தில் சுனைகளும் இருத்தல் உண்மை யாதலின், ஆண்டு பன்மலர்கள் மலர்ந்திருத்தலேயும் திரு முருகாற்றுப்படை அழகுறச் சித்திரம் தீட்டின ற் போல வர்ணித்துக் காட்டு கிறது.

கண் போல் மலர்ந்த காமரு சுனைமலர்

அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்

குன்று என்பது திருமுருகாற்றுப்படை.

திருப்பரங் குன்றத்தில் பல புராண இதிகாசச்சித்

திரங்கள் எழுதப்பட்டிருந்தன என்னும் செய்தியும் அறிய வருகின்றது.