பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

திருச்செந்துரர்

திருச்செந்துர் என்னும் தலம் அலைவாய் என்ற பெய ரினையுடையது. இத்தலம் கடற்கரையில் இருத்தலின் அலே வாய் என்ற பெயர் பெற்றுள்ளது. இன்றும் இத்தலத்தின் மடியில் வந்து படியும் நிலையில் கடல் அலைகள் வந்து படித8லக் கண் கூடாகக் காணலாம். இது கடற்கரைத் தலம் என்பதைக் கச்சியப்ப சிவாச்சாரியர்,

பருமணி வயிர முத்தம் பல வளம் பிறவும் ஆழித் திரை எறி அலைவாய் ஆகும் செந்திமா நகரம்

என்றும் சிறப்பித்துப் போந்தார். குரு குருபரர் தெள்ளு திரை கொழிக்கும் செந்துர் என்ருர்.

திருச்செந்து ர் திருநெல்வேலியிலிருந்து முப்பத் தைந்து கல் தொலையில் உள்ளது. இதனை இரயில் மூல மும், பஸ் மூலமும் அடையலாம்: இங்கு வதரைம்ப தீர்த்தம் என்ற பெயரில் ஒரு தீர்த்தம் உண்டு. நாழிக்கிணறு என்ற ஓர் அற்புதமான கிணறும் ஒன்று உண்டு. இது ஒரு சிறு சிெம்பு புகும் அளவுதா னுடையது. அச் செம்பைக் கொண்டு எத்தனை தரம் முகந்து முகந்து நாம் குளிப்போமானலும், நீர் ஒரே மட்டத்தில்தான் நிற்கும். இதனைக் கண்டு குளித்து இன்புறவேண்டியது நம் கடமை. இத்தலம் பலவாறு சிறப்பித்துப் பேசப்படுகிறது. கயிலே ம8ல அனைய செந்தில் என்றும், மகா புனிதம் தங்கும் செந்தில் என்றும் இதனை அருணகிரியார் பாடுகிருர், அப்பர் பெருமானர் அகத்தைப் பிணித்த அரும்பதியும் ஆகும் இது. அவர் நம் செந்தில் மேயவள்ளி மணுளர்க் குத்தாதை' என்று இறைவனைப் பாடும்போது செந்திலேக் குறிப் பிட்டுள்ளார். உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அ8ல வாய் என்பர் நக்கீரர். வேல் திகழ் பூண் முருகன் தீம்