பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

தினவரி வண்டார்த் தின்புற் றிசைகொடு வந் தேத்திஞ்சித் திருவளர் செந்தூர்க் கந்தப் பெருமாளே என்றும்,

சிறக்கும் தாமரை யோடையில் மேடையில் நிறக்கும் சூள்வளை பால்மணி வீசிய திருச்செந் துார்வரு சேவக னேசுரர் பெருமாளே என்றும்,

செழிக்கும் சாலியும் மேகம ளாவிய கருப்பஞ் சோலையும் வாழையும் மேதிகழ் திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே என்றும்,

சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயம் சாரலார் செந்தில்அம் பதிவாழ்வே என்றும்,

சேணுயர் சோலையின் நீழலி லேதிகழ் சீரலை வாய்வரு பெருமாளே என்றும்,

மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை

வண்டுபடு வாவி புடைசூழ மந்தி நடமாடு செந்தில் நகர் மேவு

மைந்தஅம ரேசர் பெருமாளே என்றும்,

சிகர கோபுத் தினும்மதி வினும்மேல்

செம்பொன் கம்பத் தளமீதும் தெருவி லேயுநித் திலம்எறி அலைவாய்ச்

செந்தில் கந்தப் பெருமாளே என்றும்,