பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள் 49

சேலொடு வாளைவ. ரால்கள் கிளம்பித்

தாறுகொள் பூகம்.அ ளாவிய இன்பச் சீரலைவாய்நகர் மேவிய கந்தப்பெருமாளே

என்றும்,

வாலுக மீது வண்டல் ஓடிய காலில் வந்து

சூல்நிறை வான சங்கு மாமணி ஈனவுந்து வாரிதி நீர்பரந்த சீரலை வாயுகந்த பெருமாளே என்றும்,

அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்கம்

அலறி வந்து கஞ்ச மலர்மீதே அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற

அரிய செந்தில் வந்த பெருமாளே என்றும் பாடிக்காட்டினர்.

அறிஞர் நிறைந்த பதியும் ஆகும் இது என்பதற்கு அன்னர் வாக்காகிய,

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி

செந்தில் பதிநகர் உறைவோனே என்பதைக் காணவும். இத்தனை மாண்புகளும் இதன் கண் இருத்தலின் இதனைச் சுந்தரமான செந்தில் என்றும் பாடிக் காட்டினர். இத்தலத்தின் மதிலின் மாண்பை மற வாது இத்தலத்துத் திருப்புகழ் ஈற்றுப் பாடலிலும், செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சூழ்தரு

செந்தில் மாநகர் மேவிய பெருமாளே! என்றனர் குமரகுருபரர்.

கந்திப் பொதும்பர்எழு கார்அலைக்கும் சீரலைவாய்ச்

செந்திப் பதி புரக்கும் செவ்வேளே ன்றனர்.

மு. 4