பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

திருவாவினன்குடி

திருவாவினன்குடி முருகப் பெருமானது மூன்ருவது படை வீடு. திருவாவினன்குடி பழனித்தலத்தில் உள்ள பதி. திண்டுக்கல் புகைவண்டி மூலம் இத்தலத்தை அடைய லாம். அங்கிருந்து முப்பத்தாறு கல் தொலைவில் உள்ளது. பழனி புகை வண்டி நிலயத்திருந்து மூன்று கல்லில் இது உள்ளது. இத்தலத்தினை வையாபுரி என்றும் கூறுவர். இங்கு வையாபுரி, சண்முக நதி ஆகிய தீர்த்தங்க்ள் விசேடம். இது சேரநாட்டுவைகாவூர் நாட்டினைச் சார்ந்தது என்ற குறிப்பு,

ஆதியந்த லாவாசு பாடிய

சேரர் கொங்குவை காவூர் நல்நாடதில் ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே என்ற திருப்புகழ் அடிகளால் புலனுகின்றது.

திருவாவினன் குடிக்குச் சித்தன் வாழ்வு என்ற திருப் பெயரும் உண்டு என்பது தெரியவருகிறது. இவ்வாறு கருதுபவர் உச்சி மேற்புலவர் கொள் நச்சினர்க்கினியர் ஆவார். அவர் திருமுருகாற்றுப் படைக்கு உரை கூறு மிடத்து 'இனிச்சித்தன் வாழ்வு என்று சொல்லுகின்ற ஊர் முற்காலத்தில் ஆவினன்குடி என்று பெயர் பெற்ற தென்னுமாம்' என்று கூறுகின்றனர்.

நல்லம்பர் நல்லகுடியுடைத்துச் சித்தன் வாழ் இல்லந் தொருமூன் றெரியுடைத்து-நல்லரவப் பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின் நாட்டுடைத்து நல்ல தமிழ் என்பது ஒளவையார் வாக்கு. சித்தன் என்பது பிள்ளை யாருக்குத் திருநாமம். பிள்ளையார் என்பார் ஈண்டு இளய பிள்ளையாராம் முருகப் பெருமான். சித்தன் என்பான்