பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

திருவாவினன்குடிக் கோபுரச் சிறப்பையும்செல்வவளத் தையும், கரும்பாலே வளத்தையும், சோலைச் சிறப்பையும், நீர் வளத்தையும் அழகு படப் புனைந்து பாடினர் அருணகிரியார்.

ஆத வன்கதிர் ஒவாது லாவிய

கோபு ரங்கிளர் மாமாது மேவிய ஆவி னன்குடி யோனேசு சாதிபர் பெருமாளே!

ஆலை'யும் பழனச் சோலையும் புடைசுற் ருவி னன்குடியில் பெருமாளே

கொந்தவி ழும்தட மேநி சமப்ய பண்புத ருந்திரு வாவி னன்குடி

குன்றுகள் எங்கினும் மேவ ளர்ந்தருள் பெருமாளே என்றும் அவர் பாடிய பாடலைக் காணவும்.

திருவாவினன்குடியினை வணங்கும் அன்பர்கள் பழ நித் தலத்தையும் வணங்கும் கடப்பாட்டினை மிகுதியும் உடையவராய் உள்ளனர். திருவாவினன்குடியினைப் பற்றிக்கூட அவ்வளவு அன்பு காட்டாது, பழநி மலைக்கே அன்பர்கள் பெரிதும் அன்பு காட்டுகின்றனர். பழநிப் பெருமாளுக்கே அபிடேக மாண்பு பெருஞ்சிறப்பாக அமைந் துள்ளது. அப்பழநி ஆண்டவர் போகர் என்னும் சித்த ராய் நவபாஷாணம் என்னும் மருந்துப் பொருளால் ஆன திரு உருவம் என்பது உண்மை யுனர்ந்தோர் கூற்ருகும். ஏனைய மூலஸ்தானங்களில் உள்ள கல்லுருவம் போன்ற தன்று பழநி ஆண்டவர் திருவுருவம். அருணகிரியாருக்கும் திருவாவினன் குடியினை விடப் பழநி மலையிடத்து அன்பு மிகுதி என்றுகூடக் கூறிவிடலாம். திருவாவினன்குடிக் குப் பன்னிரண்டு திருப்புகழைப் பாடிய அவர், பழநி ம8லக்கு எண்பத்து மூன்று திருப்புகழினைப் பாடியுள்ளார். பழநிமீது தமக்குள்ள அன்பினே, படிக் கின்றிலே பழநித்