பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள் 53 திருநாமம்’ எனக் கந்தர் அலங்காரத்திலும், திருவே ரகத்தைப் பாடிய திருப்புகழிலும் இத்தலத்தினை இணைத்து 'அதிசயம் அநேகம் உற்றபழநிமலை’ என்று பாடுகின்றர். "பதிலுைலகோர் புகழ் பழநி என்றும், காசியின் மீறிய பழநி” என்றும் கூறி மகிழ்வர்.

பழநி ம8ல சிவகிரி, சிவம8ல என்ற பெயர் பெற்றிருப்பதை,

சிறக்கும் அழகிய திருமகள் வஞ்சிக்

குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச் சிலைக்குள் அணைகுக சிவமலை கந்தப் பெருமாளே என்றும்,

குழகென எடுத்து கந்த உமைமுலை பிடித்த ருந்து

குமரசிவ வெற்ப மர்ந்த குகவேலா என்றும்,

அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும்

கயனிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே என்றும்,

பழநிச் சிவகிரி மீதினி லேவளர் பெருமாளே என்றும் கூறப் பட்ட அடிகளில் காணவும்.

பழனித் தலம் வீரை நகர் என்ற பெயரினையும் பெற்றது. இது, வீரா புரி வரு கோவே பழநியுள் வேலா என்றும், வீரை வருபழநி ஞான மலை என்றும், வீரை நகர் வந்து வாழ்பழநி என்றும், வீரை யுறை குமர என்றும் வரும் அடிகளால் தெளி வுறும் செய்தியாகும்.

பழநித் தல மதில் சிறப்பையும், மலை மீதிருப்பது என்பதையும், பல நீர் வளம், நிலவளம் பொருந்தியது என்பதையும் அருணகிரியார் அன்புடன் பாடிச் சென் றுள்ளார்.