பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

பவளத் தவளக் கனகப் புரிசைப் பழநி பவளக் கொடி சுற் றியபொன் கமுகின் தலையில் குலையில் பலமுத் துதிர்செய்ப் பழநிப் பதிவெற் பினில் நில் குமரப் பெருமாளே என்றும்,

பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய

நறவு நிறைவயல் கமுகடர் பொழில் திகழ் பழநி மலைவரு புரவல அமரர்கள் பெருமாளே என்றும்,

மதி தவழ் பழநி மலை என்றும்,

பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க

பழநிமலை வந்த மர்ந்த பெருமாளே என்றும்,

சொம்பிற் பலவளம் உதிர்சோலை கள் சூழ்

இஞ்சித் திருமதில் புடைசூழ் அருள் சேர் துங்கப் பழநியில் முருகா இமையோர் பெருமாளே என்றும்,

நாளி கேரம்வ ருக்கை முத்துதிர்

சோலை சூழ்பழ நிப்பதி யில் திரு ஞான பூரண சத்தித ரித்தருள் பெருமாளே என்றும்,

பனிமலர் ஒடைச் சேலுக ளித்துக்

ககனம ளாவிப் போய்வரு வெற்றிப் பழநியில்வாழ் பொன் கோமள சத்திப் பெருமாளே என்றும்,

பணைபனிசிறந்த தரளமணி சிந்து பழநி என்றும் இன்னும் பல விதமாகவும் பாடிப் பரவி யுள்ளார் அருணகிரியார்.